Close
அக்டோபர் 5, 2024 9:57 மணி

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம வீதியை மீறிய அதிகாரியை கண்டித்து, சென்னையில்  வரும் 5 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென திருவில்லிபுத்தூர்  ஜீயர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவில், சடகோபராமானுஜ ஜீயர், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியதாவது:  தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அறநிலையத் துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கோவில்களுக்கு சொந்தமான இடங்களை, ஆக்கிரமிப்பாளர் களிடம் இருந்து மீட்டு தந்து வருகிறது. ஆனால் அறநிலையத் துறையில் இருக்கும் அதிகாரிகள் சிலர் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் வழிபாட்டு முறைகள் குறித்து, ராமானுஜர் வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார்.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக, சிலர் அந்த வழிபாட்டு முறைகளை மாற்றி செயல்பட்டு வருகின்றனர். கோவில்க ளின் மரபு மீறப்பட்டு வருகிறது. கோவில் உள் விவகாரங் களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை. கோவில் நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுத்தாலும், சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர்.

கோவில் உள் விவகாரங்களில் தலையிடும் அதிகாரிகளை கண்டித்து, வருகிற 5 -ம் தேதி (சனிக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று ஜீயர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top