Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

சென்னை

சென்னை திருவொற்றியூரில் சிபிசிஎல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் பங்கேற்ற எம்பி கலாநிதி வீராசாமி

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்)சார்பில் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் இணைந்து பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமினை வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தார். முகாமில் கண்புரை ,ஒளிவிலகல், பிழைகள் கண்டறிதல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குறித்த பரிசோதனைகள் அதிநவீன கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பரிசோதனையில 41 பேருக்கு கண்புரை நோய் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் அறுவை சிகிச்சைக்காக சங்கரா நேத்ராலயாவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களுக்கு தேவையான போக்குவரத்து, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சிபிசிஎல் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் முகாமில் 130 பேருக்கு மூக்கு கண்ணாடி வழங்க பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கு கண்ணாடி வழங்கும் ஏற்பாடுகளை சி பி சி எல் நிர்வாகம் செய்து வருகிறது.
முன்னதாக முகாமை தொடங்கி வைத்த மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர் ஆகியோர் மருத்துவமனை சார்பில் வைக்கப்பட்டிருந்த அதி நவீன கருவிகள், விரிவான ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.
கண் சிகிச்சை முகாம்கள் தொடரும்: நிகழ்ச்சியில் கண் சிகிச்சை முகாம் குறித்து  சி.பி.சி.எல். நிர்வாக இயக்குனர் அரவிந்த் குமார்  கூறியது, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் இப்பகுதி மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது இதற்காக நிறுவன சமூக பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிபிசிஎல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
பல ஆண்டுகளாக கஞ்சி இசை முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கரோனா நோய் தொற்று  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தகைய கஞ்சி இசை மற்றும் மருத்துவ முகாம்களை நடத்துவதில் படங்கள் ஏற்பட்டது தற்போது மீண்டும் முகங்களை சிபிசியல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் மண நிலையில் நடைபெற்ற முதல் கஞ்சியை முகாமில் 20 பேருக்கு கண் அறுவை சிகிச்சையும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூக்கு கண்ணாடியும் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து இடங்களில் இந்த இலவச கஞ்சியை முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட உள்ளன.
இதில் அந்தந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மிக உயரிய வகையில் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுவதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இம் முகாமில் பங்கேற்பவர்களுக்கு சங்கர நேத்ராலயா மருத்துவமனை சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும் இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் மேல் சிகிச்சை தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ சிகிச்சை பெறலாம் என்றார் அரவிந்தகுமார்.
இந்நிகழ்ச்சியில் திருவெற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. சங்கர், சி.பி.சி.எல். நிறுவன முதன்மை பொது மேலாளர்  பிரேம்சந்த்,  பொது மேலாளர் புருஷோத்தமன் தலைமை கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஸ்வரலு, மக்கள் தொடர்பு மேலாளர் கஜேந்திர பாபு, ஜெய கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் மாமன்ற உறுப்பினர் கே.பி .சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top