Close
நவம்பர் 22, 2024 11:07 காலை

புதுக்கோட்டைஇந்திய மருத்துவ சங்கம் சார்பில் கருத்தரங்கு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கம்

                                                                                                                                    புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை, மற்றும் திருச்சி அட்லஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய தொடர் மருத்துவ கருத்தரங்கு புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் புதுக்கோட்டை டாக்டர் ராம்கணேஷ் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு சுகாதார சட்டம் 1939 விதி 56 மற்றும் 64 கீழ் தொற்றுநோய் கண்காணிப்பு நோய்கள் குறித்த விவரம் அடங்கிய கையேடுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை, மணல் வாரியம்மை, வெறி நாய் கடி, டெங்கு, மலேரியா, டைபாய்டு  மூளைக்காய்ச்சல், பறவை காய்ச்சல், எலிக்காய்ச்சல், காச நோய், இளம்பிள்ளை வாதம்,கொரோனா பற்றி விளக்கம் அளித்து, தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களிடம் வரும்   மேற்கூறிய தமிழ்நாடு சட்ட விதிப்படி நோய்கள் கண்டறியும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு உடனே தெரிவிக்க வேண்டும்.
தற்சமயம் நிலவும் மழைக்காலங்களில் மிக அதிி வேகமாக பரவக்கூடி நோய்கள் பற்றியும் அவற்றை அரசுடன் இணைந்து சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டுமென குறிப்பிட்டார்.
தொடர்ந்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவ பிரிவில் பணியாற்றும் இணை பேராசிரியர் டாக்டர் கணேசன் பங்கேற்று,  மழைக்காலத்தில் பரவும் பறவை காய்ச்சல் டெங்கு டைபாய்டு போன்றவற்றை கண்டறிந்து குணப்படுத்தும் வழிமுறையை திரை மூலமும் விளக்கம் அளித்தார்.
திருச்சி அட்லஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் எலும்பு மற்றும் தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான ஜெய் கிஷ் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய வழிமுறைகளை திரை மூலம் விளக்கம் அளித்தார்.
இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளையின் உறுப்பினர், அறந்தாங்கி சங்க கிளைத் தலைவர் டாக்டர் லட்சுமி நாராயணன் செயலாளர் இப்ராஹிம்சா, நிதி செயலாளர் பழனிவேல் ராஜன், புதுக்கோட்டை மாவட்ட தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சலீம், மருத்துவக் கல்லூரி பொது மருத்துவ பிரிவில் பணியாற்றும் இணை பேராசிரியர் டாக்டர் கணேசன்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்  டாக்டர் ராஜா  மூத்த மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைவரையும் கிளைச் செயலாளர் டாக்டர் முகமது சுல்தான் வரவேற்றார். நிறைவாக இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
பல்வேறு மூத்த மருத்துவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை திருச்சி அட்லஸ் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top