Close
நவம்பர் 22, 2024 12:34 மணி

நவம்பர் புரட்சிதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 இடங்களில் கொண்டாட்டம்..

புதுக்கோட்டை

நவம்பர் புரட்சி நாளை செங்கொடி ஏற்றி கொண்டாடிய சிபிஎம் கட்சி நிர்வாகிகள்

நவம்பர் புரட்சி தினத்தின் 105 -ஆவது ஆண்டு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300 -க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

மார்க்சிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மாமேதை லெனின் தலைமையில் 1917 நவம்பர் 7 அன்று ரஷியாவில் புரட்சி நடத்தப்பட்டு தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பொதுவுடமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நவம்பர் 7 அன்றும் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளால் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300 -க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள்கிழமை செங்கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழ உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.அன்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல்.

ஜி.பன்னீர்செல்வம், எல்.வடிவேல், தென்றல் கருப்பையா, எம்.ஆர்.சுப்பையா, என்.பக்குருதீன், ஆர்.வி.ராமையா, பி.வீரமுத்து, ஆர்.காமராஜ், நெருப்பு முருகேஷ், எஸ்.கலைச்செல்வன், கரு.ராமநாதன், ஆர்.சோலையப்பன், எஸ்.மணிவண்ணன், வீரையா, ஆனந்த் மற்றும் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top