தெற்கு ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள தெற்கு ஆற்றில் வைகை அணையில் இருந்து வரும் உபரி நீரை திறந்துவிட பொதுப்பணித்துறை மதுரை தலைமை கண்காணிப்பு பொறியாளரிடம், தோப்பூர் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வைகை ஆற்று தண்ணீரை தெற்கு ஆற்றில் திறந்து விட்டால் காரியாபட்டி ஒன்றியத்தில் உப்பிலிக்குண்டு, எஸ்.கல்லுப்பட்டி, எஸ் கடமங்குளம்,புல்லுர், தொடுவன்பட்டி, பிச்சம்பட்டி, தோப்பூர், சத்திரம், புளியங்குளம், கிழவனேரி, புதுப்பட்டி, பணிகுறிப்பு, அல்லாளப்பேரி போன்ற கண்மாய்களின் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் பலனடைவார்கள்.
மேலும் இந்தப் பகுதி விவசாயிகள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நெல், கடலை, பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்ய முடியும். எனவே காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி வைகை ஆற்றில் வரும் வெள்ள உபரி நீரை உலகாணியில் உள்ள தடுப்பணை ஷட்டர் மூலம் தண்ணீர் திறந்து விட மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் காரியாபட்டி ஒன்றிய கழகச்செயலாளரும் தோப்பூர் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.