Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

புதுகை ஆத்மா யோகா மையம் சார்பில் மாநில யோகா போட்டிகள்: வென்றவர்களுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை

புதுகை ஆத்மாயோகா மையம் சார்பில் நடைபெற்ற மாநில யோகாப் போட்டியில் கோப்பை வென்ற மாணவர்

புதுக்கோட்டையில் ஆத்மா யோகா மையம் சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி அளவிலான நடைபெறும் போட்டியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆத்மா யோகா மையம் சார்பில் 21 -ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான யோகாசன போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த யோகா வாகையர் போட்டியில் இருபது பிரிவுகளாக ஐந்து வயது முதல் 80 வயது வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியா குமாரி, சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் 1200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பல்வேறு வகையான யோகாசனங்கள் செய்து அசத்தினர்.

இந்த யோகாசன போட்டியில் 20 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

அதேபோன்று நடைபெற்ற இந்த போட்டியில் ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த யோவா யோகா மைய மாணவர் சித்தேஷ் என்பவரும்  ஆண்கள் பிரிவில்  கரூர் விவேகானந்தா யோகா மையத்தின் மாணவர் , விக்னேஷ் என்பவரும்  கிருஷ்ண பிரியா என்ற மாணவியும் ஒட்டு மொத்த வாகையர் பட்டத்தினை வென்றனர்.

புதுக்கோட்டை
யோகாசனப் போட்டியில் வென்ற வெங்டேஸ்வரா பள்ளி மாணவர்கள்

பரிசளிப்பு விழாவில், எஸ்.ஆர். குழும நிறுவனர் எஸ். ராமச்சந்திரன், புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, கவிஞர் தங்கம்மூர்த்தி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா,  நகர்மன்றத்தலைவர் திலகவதி, நகர திமுக செயலர் ஆ. செந்தில், தொழிலதிபர் எஸ்விஎஸ். ஜெயகுமார்  உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு  சைக்கிள் பரிசு  வழங்கப்பட்டது.  மேலும் இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
இந்த யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டவர்கள், தேசிய அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் இந்த போட்டியில் தமிழ்நாடு பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆத்மா யோகா மைய நிர்வாகிகள் பாண்டியன், புவனேஸ்வரி பாண்டியன் குழுவினர் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top