Close
செப்டம்பர் 20, 2024 6:48 காலை

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட கிராமங்களில் வேளாண்துறையினர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்த வேளாண் அலுவலர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்ட செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது.

புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரித்தல். வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.உழவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல், சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குதல்.

ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டம், பிரதம மந்திரி வேளாண் நீர்ப் பாசனத் திட்டம், ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் – துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த திட்டங்களில் உள்ள நிதி ஆதாரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டு 120 கிராமங்களில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம்இ கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 8 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு  வருகிறது.

இதன் திட்ட செயலாக்கம் வீரமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தரிசு நில மேம்பாட்டு குழுக்கள், அங்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றையும், விழிப்புணர்வு சுவர் விளம்பரம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து விவசாயிகளிடம் திட்ட பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் பாராமரித்திட கேட்டுக்கொண்டார்.

ஆய்வில் இயந்திர நெல் சாகுபடி செயல்விளக்கம், வரப்பில் உளுந்து சாகுபடி மற்றும் நேரடி நெல் விதைப்புப் பகுதியில் பயிர் சாகுபடி குறித்தும், அதற்கான நுண்ணூட்ட உரக்கலவையினை இடுவதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பெருநாவலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பீரியம் செலுத்த கடைசி நாள்.15.11.2022 எனவும், கடைசி நேர கூட்டத்தினை தவிர்த்திட, முன்னதாக தேவையான ஆவணங்களுடன் ஒரு ஏக்கருக்கு ரூ.488 மற்றும் 05 காசுகள் பீரியமாக செலுத்தி பயிர் காப்பீடு செய்திட வேண்டுமென  அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின் போது வேளாண்மை அலுவலர்(த.க) எஸ்.முகமது ரபி, வேளாண் அலுவலர் பிரவினா, வீரமங்கலம் கிராமத்தின் முனைப்பு அலுவலர்கள் செ. நிவ்யா, ஜி. பிரவீனா மற்றும் ச. அறிவுக்கரசி ஆகியோர் உடனிருந்து ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இத்தகவலை  புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர்  மா. பெரியசாமி  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top