Close
நவம்பர் 22, 2024 6:40 காலை

குழந்தைகள் தினவிழாவில் குதூகலம்… ஐந்தே நிமிடத்தில் கவிதை எழுதி அசத்திய மாணவர்கள்

புதுக்கோட்டை

புதுகை வெங்கடேஸ்ரா பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மிகவும் வித்தியாசமான முறையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் தினவிழாவைமுன்னிட்டு இன்று‘ புத்தகம் இல்லாநாள்’ என அறிவித்தார்பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி. புத்தகப் பை இல்லாமல் மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாது மிகஉற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி,ரோஜாப்பூ கொடுத் துஆசிரியர்கள் வரவேற்றனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்துக்கு மாணவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

ரோட்டு மேலகாரு,காருக்குள்ள யாரு, எங்க மாமா நேரு என்ற பிரபலமான பாடலை முதல்வர்தங்கம் மூர்த்தி பாட தொடர்ந்து மாணவர்கள் உற்சாகத்துடன் பாடினர்.

செல்பி பாய்ண்ட்டில் நின்று மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மழைகாரணமாக வெளிப்புற நிகழ்ச்சி நடத்த இயலாத காரணத்தால் ஆசிரியர்கள் வகுப்பறை   உள்ளேயே ஆடல், பாடல் பாடி மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கு பல   பரிசுகளை வழங்கினர். பரிசுகளை அள்ளி வழங்கிய ஆசிரியர்களுக்கு,மாணவர்கள் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தனர்.

ஒன்பதாம் வகுப்புக்கு சென்ற பள்ளி முதல்வர் கவிஞர்தங்கம் மூர்த்தி மாணவர்களை சந்தித்து இன்று மழை பெய்கிறது. ஜன்னல் வழியே அதனை ரசிக்கிறீர்கள். அதனை வைத்து கவிதை எழுதுங்களேன் என்று கூற உடனே பேனா எடுத்த மாணவர்கள்  ஐந்தேநிமிடங்களில் மழை பற்றிய மழலைச் சிந்தனைச் சிதறல்களை கவிதைகளாக எழுதிக் காட்டியது பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஒவ்வொருமாணவரும் ஒவ்வொரு கோணத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி தாங்களும் கவிஞர்கள் தான் என்பதை நிரூபித்தார்கள். வகுப்புகளை அலங்கரித்து மாணவர்களை ஆசிரியர்கள்வரவேற்றுக் கொண்டாடிய காட்சி கண்ணைக் கவர்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top