Close
ஏப்ரல் 11, 2025 10:53 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை சான்று- அங்கக சான்று இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில்சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குநர் வளர்மதி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமான விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தினார்.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் தரக்கூடிய, இரகங்களின் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வாளர்கள், உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப் படும் விதைகளின் முளைப்பு திறன் மற்றும் தரத்தை உறுதி செய்ய, மாதிரி விதைகளை எடுத்து வருகின்றனர்.

ஆய்வில், தரமற்ற விதைகள் விற்பனை செய்வது தெரிய வந்தால், விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றார். இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள், விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும், ரசீது இல்லாமல் விற்றால் விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில், விதைச் சான்று துறையினரால் மேலப்புதுவயல் கிராமத்தில் 2.5 ஏக்கரில் குணசேகரன் வயலில் ஏடீடி 54 இரக ஆதார விதைகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணையினை நேரில் பார்வையிட்டு வயல் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தூர்கட்டும் பருவத்தில் உள்ள 56 நாள் வயதுடைய பயிர் என்பதால், ஊட்டசத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தரமான விதை உற்பத்தி முறைகளை கடைபிடித்து நல்ல மகசூல் பெற அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, விதை ஆய்வு துணை இயக்குநர்  விநாயக மூர்த்தி, வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டம்)  மோகன்ராஜ், விதை ஆய்வாளர்கள், விதை சான்று அலுவலர் கள் விதை பரிசோதனை அலுவலர் மற்றும் உதவி விதை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top