Close
ஏப்ரல் 7, 2025 11:05 காலை

ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்தலில் விவசாயி வளர்த்த 17 ஆடுகள் பலி..

ஈரோடு

பவானி அருகே விவசாயி வளர்த்த ஆடுகள் மர்ம விலங்கு கடித்து பலியாகின

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள குருவரெட்டியூரில் சக்திவேல் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில் 17ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து சென்னம்பட்டி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள குருவரெட்டியூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல். விவசாயியான இவர் 100 -க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் கொண்டு வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்.

இதையடுத்து நேற்று இரவு ஆடுகளை பட்டியலில் ஆடுகளை அடைத்து விட்டு சக்திவேல் தூங்க சென்ற நிலையில், அதிகாலையில் ஆடுகள் அலறல் சப்தம் கேட்டு வந்து பார்த்த போது பட்டியலில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகளில் 17ஆடுகள் கழுத்து மற்றும் மடிபகுதியில் கடிப்பட்டு உயிரிழந்தது கிடந்தைக் கண்டு விவசாயி சக்திவேல் அதிர்ச்சி அடைந்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டியலில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வன பகுதியையொட்டி உள்ளதால் செந்நாய் அல்லது சிறுத்தை கடித்து கொன்றதா அல்லது நாய் கடித்ததா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடுகள் உயிரிந்ததால் விவசாயி சக்திவேல் வேதனையில்  ஆழ்ந்துள்ளார். விவசாயிக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top