Close
செப்டம்பர் 19, 2024 11:07 மணி

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மருத்துவத்துறை நூற்றாண்டு விழா ஜோதியை ஒப்படைத்த ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை 1922 முதல் 2022 வரை பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்தடைந்த தொடர் தீபத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, பெற்றுக் கொண்டு பொது சுகாதார துறையினரிடம் ஒப்படைத்தார்.

இந்த ஜோதியினை தமிழக முழுவதும் கொண்டு செல்வதன் மூலம், ஒரு நூற்றாண்டாக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை செய்த சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்று திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜோதி பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் பொது சுகாதாரத் துறை அதனோடு இணைந்து செயல்பட்டு மக்கள் நல பணிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை பாராட்டி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

விழாவில்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேசியதாவது: மருத்துவத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு, தமிழகத்திற்கு முன்னோடி மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கி வருவதாகவும் இதற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் அனைவருக்கும் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் நூற்றாண்டு விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன், இணை இயக்குனர் ஊரக நகர் பணிகளின் மருத்துவர் ராமு, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குனர் ஊரக நலப் பணிகளின் சகாயமேரிரீட்டா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top