இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு சென்ற புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா இளைஞர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்டனர்
புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா சார்பாக அரக்கோணம் ராணுவ முகாமில் உள்ள நான்காவது பெட்டாலியன் சார்பில் நடத்தக்கூடிய இயற்கை பேரிடர் மேலாண்மை குறித்த ஒரு வார கால பயிற்சி முகாமிற்கு 26 இளைஞர்களும் 4 இளம் பெண்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.
இவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார். புத்தாஸ் வீரக்கலைக் கழகத்தின் நிறுவனர் சேது .கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இளையோர் குழுத் தலைவர் ஹரிகரன் வரவேற்றார்.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம் மற்றும் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் தலைவர் வீரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்க செல்லும் இளையோரை வாழ்த்தினார்கள்.
இதில், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரி விரிவுரையாளர் கலந்து கொண்டார்.தேசிய இளையோர் தொண்டர் வாசு நன்றி கூறினார்.
முன்னதாக, நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர் இளையோர், இயற்கை பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கான பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.