Close
நவம்பர் 24, 2024 9:12 மணி

வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த நாளில்…

உலகம்

வின்சென்ட் சர்ச்சில்

வின்ஸ்டன் சர்ச்சில் உண்மையில் திறமையற்றவரா? நிச்சயமாக இல்லை – அவர் பல்வேறு துறைகளில் மிகவும் திறமையானவர்.

ஒரு அரசியல்வாதியாக அவர் 17 தேர்தல்களுக்கு மேல் வெற்றி பெற்றார் – அவர் இழந்த சில தேர்தல்களை விட மிக அதிகம்.
ஒரு தலைவராக அவர் பாசிச சர்வாதிகாரிகள் மற்றும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகள் மீதான அவர்களின் தாக்குதலை எதிர்க்க பிரிட்டன் பொது மக்களை தூண்டினார்.
ஒரு அரசியல்வாதியாக அவர் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பெரும் கூட்டணியை ஊக்குவித்தார்.

முதல் உலகப் போரில் ஒரு அசல் சிந்தனையாளராக அவர் மேற்கத்திய நாடுகளின் போர் திட்டங்களை முறியடிப்பதற்கு,
வெற்றிகரமாக சமாளிக்க பல யோசனைகளுடன் முன் வந்தார்.

இரண்டாம் உலகப் போரில், 1940 -ஆம் ஆண்டின் இருண்ட நாட்களில், பிரிட்டன் தனித்து நின்று போரிடும் போது, ஐரோப்பிய படையெடுப்பு அச்சுறுத்தலுக்கு தளராமல் ஊக்கமளிப்பவராக, உந்து சக்தியாக, பல போர் முறை நுணுக்கங்களை இராணுவத்திற்கு அறிவுறுத்தினார்.

ஒரு சமூக சீர்திருத்தவாதியாக, பிரிட்டன் மக்களுக்காக பல சமூக நீதிகள் கிடைப்பதற்காக புதிய திட்டங்களை வகுத்தார். வயதானவர்களுக்கான ஓய்வூதியங்களைஅறிமுகப்படுத் தினார். போருக்குப் பிந்தைய சூழலில், மக்கள் வாழ்வாதாரம் குறித்த அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறுதன் அமைச்சர் சகாக்களுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு நூலாசிரியராக அவர் பல புத்தகங்களை எழுதினார். அவருடைய பெரும்பாலான புத்தகங்கள் இன்னும் அச்சில் உள்ளன. அவரது பல பேச்சுக்களின் தொகுப்பு, வரலாற்றுப் பதிவாகக் கருதப்பட்டு அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1953-ல் வழங்கப்பட்டது. சர்ச்சில் தவிர வேறு யாராவது இவ்வளவு எளிதாக இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற இயலுமா என்பது கேள்விக்குறியே! பிறகு அவர் எவ்வாறு பெற்றார்? சர்ச்சிலாக இருந்த அடிப்படையில் எனத்தான் கூறத் தோன்றுகிறது!

ஒரு கலைஞராக அவர் பல பரிசுகளை வென்றார். அவரது ஓவியம் பல மில்லியனுக்கு விற்கப்பட்டது.குடும்பஸ்தனாக, 57 வருடங்கள் காதல் மண வாழ்க்கையை அனுபவித்து , 5 குழந்தைகளுக்கு தந்தையானார்.

சர்ச்சில் திறமையற்றவர் என்று நினைக்கும் எவரும், பல்வேறு துறைகளில் அவர் செய்த சாதனைகளை பற்றி உண்மையிலேயே அறியாதவராக இருக்க வேண்டும்.

பிரிட்டன் வரலாற்று நாயகனான வின்ஸடன் சர்ச்சில் இந்தியா மீது எப்படியான பார்வையை, அணுகுமுறை வைத்திருந்தார் என்பதையும் நாம் அறிய வேண்டும்.

இரண்டாம் உலக போரின் போது (1939–45) இந்திய மக்கள் பஞ்சத்தில் இருக்கும் போது , 1943 ஆம் ஆண்டில் வங்காள பஞ்சம் தலைவிரித்தாடியது. லட்சக்கணக்கான டன்கள் தானியங்கள் கொல்கத்தாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

எதிர் காலத்தில் ஆங்கிலேயருக்கு அளிக்கும் பொருட்டு 1.70 லட்சம் டன் தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டது . அவைகளை பஞ்சத்தில் வாடும் இந்திய மக்களுக்கு வழங்கலாம் என்று வேண்டுகோள் விடுத்த ஆங்கில உயர் அதிகாரிகள், நிர்வாகிகள் எதிர்ப்பை மீறி தானியங்கள் சர்ச்சில் உத்தரவு படி இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டது.
இந்திய மக்களின் பட்டினி தோற்றமும், கொல்கத்தா துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்ட ஏராளமான மூட்டை தானியங்களின் படமும் ஒரு சேர பத்திரிகைகளில் வந்து அது மக்களிடையே பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்தில் பஞ்சம் பற்றி ஒரு பத்திரிக்கை நிருபர் சர்ச்சிலிடம் கேள்வி கேட்டபோது அவர் “காந்தி இன்னும் சாகவில்லையே” என்று திமிராக பதில் அளித்தார். மேலும் இந்தியர்கள் எலிகளை போல இனப்பெருக்கம் செய்கிறார்கள். அதனால் தான் பஞ்சம் வந்தது என்றார்.
வட்டமேஜை மாநாட்டிற்கு காந்தி வந்த போது அவரை “அரை நிர்வாண பக்கிரி அரசரின் அரண்மனை படி ஏறுகிறார்” என்றார். பல நாடுகள் உட்பட இந்திய மக்களையும் அடிமை படுத்தி வைத்து கொண்டு அதே சமயத்தில் ஹிட்லரிடம் இருந்து உலக மக்களை மீட்பேன் என்று அவர் கூறியதை ஆங்கில பத்திரிகைகள் கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டன.

சர்ச்சில் இந்திய மக்கள் மீதும், காந்தி மீதும் மிக வெறுப்பு கொண்டு இருந்தார் என்பதும், அவர் ஒரு ஏகாதிபத்தியவாதி, காலனி ஆதிக்கவாதி , இனவாதி என்பதும் உண்மை .

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top