Close
நவம்பர் 22, 2024 6:07 மணி

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில்  51 பயனாளிகளுக்கு உதவிகள்: அமைச்சர் ரகுபதி அளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டையில் நடைபெற்ற  அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில்  51 பயனாளிகளுக்கு ரூ.15,38,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி  வழங்கினார்.

புதுக்கோட்டையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  51 பயனாளிகளுக்கு ரூ.15,38,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  (03.12.2022) வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக  செயல்பட்டு வரும் அரசு சிறப்பு பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மறுவாழ்வு இல்லங்களின் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகள்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலம் பொருத்தப்பட்ட நவீன மடக்கு நாற்காலி, உருபெருக்கி, சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி, சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் தொழில் தொடங்குவதற்கான அரசு மானியம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை 51 பயனாளிகளுக்கு ரூ.15,38,000 மதிப்பில்   அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

பின்ன அமைச்சர் பேசியதாவது: தமிழக முதல்வர்  மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில்  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் மாற்றுத்திறனாளி களுக்காக அரசின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பதற்கும், அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றிடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 3-ஆம் நாளினை அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர், மாற்றுத்திறனாளிகளை கடந்த காலங்களில் உடல் ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டு வந்ததை, ஊனம் என்பது ஒரு குறை இல்லை என்ற நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று  பெயர் சூட்டி  அவர்களுக்கென தனித் துறையையும் உருவாக்கினார்.

அவர் வழியில் முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய அரசின் உதவிகளின் முக்கியத்துவத்தை அறிந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இதன்படி, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளின் மீது தனிகவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதிய விடியலை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார் என  அமைச்சர் எஸ்.ரகுபதி  பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், இணை இயக்குநர் ஊரக நலப் பணிகள் மரு.க.ராமு.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா.அனிதா, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, முடநீக்கியியல் வல்லுநர் ச.ஜெகன் முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top