ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி, ஆயிக்கவுண்டம் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி 2022–23 திட்டத்தில் 34.20 லட்சம் மதிப்பில் நடைபெறும் புதிய குளம் அமைக்கும் பணியினையும், தலையம்பாளையத்தில் 40.57 லட்சத்தில் நடைபெறும் புதிய தார்சாலை பணியினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி 2020-21 திட்டத்தில் 22.65 லட்சத்தில் கட்டப்பட்ட கராண்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சின்னவீரசங்கிலி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து பேசியதாவது:
கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 21 ஆயிரத்து 500 கோடி கடன் வழங்கப்பட்டது அதே போன்று நடப்பு ஆண்டு இலக்கை விஞ்சி கடன் வழங்கப்படும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் என்றார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா, ஆணையாளர் டாக்டர் தரேஸ் அகமது, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை . இயக்குநர் சதிவ்யதர்ஷினி, ஈபெருந்துறை ஊராட்சி ஒன்றியம்ரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) லி.மதுபாலன், பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி. சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி.
பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிபாக்கியம், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், சீனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சுதா, கராண்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.செல்வராஜ், சின்னவீர சங்கிலி ஊராட்சி மன்ற தலைவர் டி.கண்ணம்மாள் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.