ஈரோடு கோபி பச்சைமலையில் ரூ 5 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
கோபி பச்சை மலையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
கோபி பச்சை மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக் கோவிலுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கோயில் அடிவாரத்தில் கோபி நகர் மன்ற உறுப்பினர் முத்துரமணன் தனது சொந்த செலவில் ரூ.5 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் கட்டியுள்ளார் .
இந்த மணிமண்டபத்தை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பிறகு கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் முத்துரமணன் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன் அதிமுக நிர்வாகிகள் அருள் ராமச்சந்திரன் மற்றும் கோவில் அறங்காவல் குழுவினர் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்
கோபி பச்சைமலையில் ரூ 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார் அருகில் நகரமன்ற உறுப்பினர் முத்துரமணன் உள்ளார்