Close
செப்டம்பர் 20, 2024 5:55 காலை

கால்பந்து உலகின் நிகரில்லா மன்னன் சுனில் சேத்ரி..

உலகம்

கால்பந்து உலகின் நிகரில்லா மன்னன் சுனில் சேத்ரி

உலக கோப்பை கால்பந்தாட்டம் கால் இறுதி ஆட்டம் நடைப்பெறுகிற வேளையில்,  நினைவு கூரப்பட வேண்டிய கால்பந்து உலகின் நிகரில்லா மன்னன் சுனில் சேத்ரி..

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் ஆதரவில் மற்ற விளையாட்டிற்கு 100-ல் 5% அளவிலாவது இருக்கிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.

வணிகம் முதல் பல காரணிகள் இந்தியாவில் கிரிக்கெட்டை, விளையாட்டு என்பதை தாண்டி ஒரு எல்லையற்ற இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. அதேசமயம் அந்தக் காரணிகளால் தான் மற்ற விளையாட்டுகளும், மற்ற விளையாட்டு வீரர்களும் அறியப்படாத அளவிற்கு மறைக்கப்படுகிறது என்பது உண்மை.

தற்போது விளையாடி வரும் வீரர்களில் சர்வதேச அரங்கில் அதிக கோல் போட்ட வீரர்கள் பட்டியலில் முன்னேறிய இந்தியாவின் சுனில் சேத்ரி.., சர்வதேச கோல்கள் கணக்கில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு அருகில் சென்றவர். இப்படிப்பட்ட ஒரு சாதனையாளர் பிரபலமாகாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்று.

இந்திய கால்பந்து உலகில் எத்தனை வீரர்கள் வந்தாலும் இவருக்கு நிகரில்லை என்றே கூறலாம். பொதுவாக வீரர்கள் தங்களது இளம் வயதில் சிறப்பாக செயல்பட்டு, பின்னர் வயதும் அனுபவமும் கூடும் போது தங்களது ஆட்டத்தில் சற்று குறைவாக செயல்படுவார்கள்.

ஆனால் சுனில் சேத்ரி அதற்கு விதி விலக்கு. அவரின் இளம் வயது முதல் தற்போதைய 38 வயது வரை அவரின் வேகம் குறைந்ததாக இல்லை. எனவே, இவரின் பயணத்தை பார்த்தால் ‘வயது என்பது ஒன்றும் கிடையாது அது ஒரு எண் மட்டுமே’ என்று கூறிவிடலாம். மேலும் இந்திய நாட்டில் ஏற்பட்ட கால்பந்து வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பை ஒருவராலும் ஒருநாளும் மறக்க முடியாது.

இந்திய கால்பந்தாட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நினைவுகூற கூடிய பல நிகழ்வுகளை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். சர்வதேச கால்பந்து அணிகளுக் கான கோல்களில் மெஸ்ஸியுடன் ஒப்பிடப்பட்டார்.

நமது தேசிய அணி உலகளவில் உயர்மட்ட அணிகளை களத்தில் சந்திக்கவில்லையென்றாலும் அவருடைய திறமையில் ஒரு சுயமான தன்மையை நாம் கண்டுகொள்ள முடியும். துரதிருஷ்டவசமாக, வேறு எந்த இந்திய வீரரும் அவரளவுக்கு போராட்டத்தை சந்திக்கவில்லை.

இந்திய கால்பந்தைப் பொறுத்தவரை, அவர் கொண்டாடப்பட வேண்டும். குறைந்தது நம்மில் 10 முதல் 20 சதவீத பேர்களை கால்பந்து பார்க்கத் தொடங்குவதற்கு அவர் ஒரு காரணமாக இருந்தவர். இந்திய அளவில் இன்னொரு புதிய வீரர் தனது புள்ளிவிவரங்களின் சாதனையை முறியடிக்கும் வரை, இந்த மனிதர் ஒரு லெஜென்டாக, ஜாம்பவானாக ஜொலிப்பார்.

தன் தாயக மண்ணில் இருந்து தான் விளையாடும் கால்பந்து விளையாட்டிற்காக ஆதரவைக் கேட்கும் ஒரு அணியின் தலைவனாக சுனில் சேத்ரி இருந்திருக்கிறார். கால்பந்து விளையாட்டில் ஆர்வமும், ஆதரவும் ஒரு தொடர்ச்சியான பற்றாக்குறையாக இருக்கும் தன் சொந்த கூட்டமைப்பிலி ருந்து ஆதரவைப் பெறுவதற்கு அவர் எடுக்கும் முன்னெடுப்பு களும், முயற்சிகளும் இனி எப்போதும் நினைவு கூரப்படும்.

உலக அரங்கில் இந்த விளையாட்டு துறையில் நிலைநிறுத்த இயலாத நமது நிலையை பலர் கேலி செய்கிறார்கள். அவர் மெஸ்ஸியோ அல்லது ரொனால்டோவோ இல்லை.ஆனால் தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து இன்னும் ஆர்வத்துடன் இந்த விளையாட்டை விளையாடுகிறார்.

தனது இரத்தத்தை வியர்வையாக சிந்துவதன் மூலம் நம் அணியின் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கிறார், அவர் நம் இந்திய அணியின் கேப்டன், அவரிடமிருந்து அதை நம்மால் பறிக்க முடியாது.
என்னைப் பொறுத்தவரை அவர் இந்திய கால்பந்தில் முதலிடத்தைப் பெற கடுமையாக உழைக்கிற இளைஞனான அன்றிலிருந்து நம் கால்பந்தாட்ட விளையாட்டுக்கான ஜோதியைத் தாங்கியவராக இருந்து வருகிறார்.

இங்கிலாந்தின் லீட்ஸ் யுனைடெட், கோவென்ட்ரி, செல்டிக், க்யூபிஆர் போன்ற கிளப்புகளுக்கு விளையாட சேத்ரிக்கு விருப்பம் இருந்தது. அவருக்கு 3 வருட ஒப்பந்தத்தை க்யூபிஆர் கிளப் வழங்கியது, ஆனால் விசா அனுமதி விவகாரத்தால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதை நிராகரித்தது.

இங்கிலாந்து கால்பந்தாட்ட கிளப்புகளில் இவர் ஆடுவதற்கு ஆக கூடிய தகுதிகள் இருந்தும், அவர் சார்ந்த இந்திய அணி, உலக கால்பந்தாட்ட தரப்பட்டியலில் 70 வது இடத்திற்குள் இல்லாததால்  தேர்வு செய்யப்படவில்லை என்பது சோகம்.

கால்பந்து சர்வதேச கூட்டமைப்புகள், தனது கிளப்புகளுக் கான பங்கேற்பாளர்கள் தேர்வில், தனிமனித திறமையை கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர அந்த விளையாட்டு வீரர் சார்ந்த நாட்டின் சர்வதேச தர பட்டியலை பார்க்க கூடாது.

நம் நாட்டில் எந்த ஒரு அங்கீகாரத்தையும் தராத கால்பந்து போன்ற விளையாட்டு, வெற்றிகரமான ஏறுமுகத்தை எளிதாக உருவாக்கி வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மேலும் அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையில் கால்பந்துக் காக போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை .

கிரிக்கெட் மட்டத்தில் கால்பந்து கொண்டாடப்பட்டு இருந்தால், சுனில் சேத்ரி போன்றவர்கள் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு இணையான புகழ் பெற்றிருப்பார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் துன்புறுத்தப்பட்டு இறந்த சம்பவத்திற்கு நீதி கேட்டுக் குரலெழுப்பியவர்களுள் இவரும் ஒருவர்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top