Close
செப்டம்பர் 20, 2024 4:13 காலை

புதுக்கோட்டைஇந்திய மருத்துவ சங்கம் , மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய  மருத்துவ கருத்தரங்கு

புதுக்கோட்டை

புதுக்கோட்டைஇந்திய மருத்துவ சங்கம் , மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ கருத்தரங்கு. நடைபெற்றது

புதுக்கோட்டைஇந்திய மருத்துவ சங்கம் , மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய  மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது                                                                                                                                                                                                               புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை, மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ கருத்தரங்கு புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார் , அனைவரையும் கிளைச் செயலாளர் டாக்டர் முகமது சுல்தான் வரவேற்றார்.

நிகழ்வில்   தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை  நுரையீரல் மருத்துவப் பிரிவு சிறப்பு மருத்துவ ஆலோசகர் டாக்டர் அருண் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு  அறுவை சிகிச்சை நிபுணர் ஐசக் ரிச்சர்ட்ஸ்  பேசுகையில், உறக்கத்தின் போது மூச்சுக் குழாயில் ஏற்படும் சதை தளர்வினால் மூச்சு திணற லுக்கும் மற்றும் குறட்டை சத்தம் உண்டாகும்  விதத்தினையும் அதனை சரி செய்ய மருத்துவ முறையிலும் அறுவை சிகிச்சை முறையிலும் புதிய நடைமுறை விதத்தினை திரை மூலம்  விளக்கமளித்தார்.

கருத்தரங்கில் .சாரதா மணி ஜானகி ரவிக்குமார், வெண்ணிலா, பெரியசாமி, ரங்கதுரை, ஆறுமுகம், ஹரிகரன், சரவணன், வெங்கடேசன், முஜிபுர் ரஹ்மான், சலீம் நவரத்தினசாமி, சலீம் அப்துல் குத்தூஸ், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சார்பாக டாக்டர் ராஜா பல்வேறு மூத்த மருத்துவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்புடன் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை தலைவர் டாக்டர் சுவாமிநாதன்,    செயலாளர் டாக்டர் முகமது சுல்தான், நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைமரூத்துவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்கள்.

நிறைவாக இந்திய மருத்துவ சங்க  நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.  ஏற்பாடுகளை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் சிறப்பாக செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top