ரஜினிகாந்தை இனிமேல்தான் தமிழகம் கொண்டாட வேண்டும் என்று அவசியம் இல்லை அவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த 1978 -ல் இருந்து இன்று வரை தமிழக மக்கள் கொண்டாடி தீர்த்த ஒரே உட்ச நட்சத்திரம் சிவாஜி ராவ் கெய்க்வார்ட் ( எ) ரஜினிகாந்த் மட்டுமே.
ஒரு கை என்ன இரண்டு கை இரண்டு கால் போனாலும் இந்த காளி பொழச்சுக்குவான் சார். கெட்ட பய சார் இந்த காளி என மகேந்திரன் முள்ளும் மலரில் வைத்த வசனம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. ரஜினி ஜெயிக்க பிறந்தவர் காரணம் அவர் தன்னம்பிக்கையின் உச்சம்.
இன்றும் கூட ஆர்ப்பாட்டம் செய்யாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு கதாப்பாத்திரத்துக்கு தளபதியில் ரஜினியின் நடிப்பை உதாரணமாக கொள்ளலாம்.அடுத்த முறை எந்த ரஜினி படத்தை பார்த்தாலும் படத்துக்குள் சென்று விடாமல்
படத்திற்கு சற்று வெளியே நின்று பாருங்கள்.(கடைசியாக வந்த பேட்ட, தர்பார், அண்ணாத்தே வரை அப்படி தான் நான் பார்த்தேன். வர இருக்கும் ஜெயிலரையும் கூட அப்படியே பார்ப்பேன்).ரஜினி மக்களை கவர்ந்த காரணம் புரியும். அவர் எத்தனை பெரிய நடிகர் என்பதும் தெரியும்.
நடிகனுக்கு இல்லை; ரஜினிகாந்த் என்கிற இந்த நல்ல மனுஷனுக்குத்தான் நிறைய பேர் ரசிகர்கள்!
உடல்நலம் சரியில்லை என்று செய்திவரும்போது பிரார்த்தனை செய்யத்தோன்றும். இப்போதும் அவர் நன்றாக இருக்கட்டும் என்றே பிரார்த்தனை செய்கிறேன்.
…இங்கிலாந்திலிருந்து சங்கர்.