Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா

புதுக்கோட்டை

திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு பெருவிழா

திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு தலைமை ஏற்று நடத்திய திருவாளர் சோமசுந்தரம் (தலைமையாசிரியை, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி)  பொன்னாடை அணிவித்து பள்ளியின் தலைமையாசிரியை அருட்சகோதரி சி. ஜோஸ்பின் மேரி  வரவேற்றார்.

தாளாளர் அருட்சகோதரி செசிலி  நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள். மாணவிகள் தமிழர் பாரம்பரிய நடனமான பரத கலையின் மூலம் வரவேற்றனர்.

“கிறிஸ்து பிறப்பு அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் எட்டாம் வகுப்பு மாணவிகள் உரையாற்றினார்கள். கிறிஸ்து பிறப்பு வரலாற்றை மாணவிகள் நடனத்தின் வாயிலாக  நடத்தினர்.

“பிரபஞ்சத்தை நேசி” என்ற தலைப்பில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. “யார் மனதில் இறைவன் பிறக்க நினைக்கிறார்?” என்ற தலைப்பில் ஆசிரியை கிறிஸ்டி மற்றும் ஆசிரியை ராக அபிநயா கிறிஸ்துமஸ் தின செய்தியை வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினர் தமது உரையில் “வாசி,யோசி” என வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். மூன்று ஞானிகள் வந்து இயேசு பாலனை வணங்கி சென்ற நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது.

தலைமை ஆசிரியை அருட்சகோதரி அனைவருக்கும் ஆசியுரை வழங்கி,ஏழை எளிய மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார்கள். மாணவி  குண ஹர்ஷினி ராம் தேசிய திறனறி தேர்வில் 85 மதிப்பெண்களுடன் 119 -ஆம் இடம் பெற்றமையை பாராட்டி மாணவிக்கும், அவளது பெற்றோருக் கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் மூன்று கிறிஸ்மஸ் தாத்தாக்கள் வந்து நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். பாப்பிறை பண்ணுடன் விழா  நிறைவுற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top