Close
செப்டம்பர் 20, 2024 6:55 காலை

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த நீதிபதி சத்யா

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை கள் தொடர்பாக பெண்கள் மற்றும் மாணவிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடு மைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மேலும் போகசோ வழக்கு அதிக அளவில் தற்போது பதிவு செய்யப்படுகிறது.

பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை களை தடுக்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி,  நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா தொடங்கி வைத்தார்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் 500 -க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு சென்று அடைந்தது. புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் சார்பாக 500 -க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து குழந்தை திருமண தடை சட்டம் குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இளம் சிறார் நீதிக் குழுமம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top