Close
செப்டம்பர் 20, 2024 9:21 காலை

புதுக்கோட்டையில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை நிறுவ கோரிக்கை

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாகிகள்

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க கோரிக்கை.

இது குறித்து தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்டத்தலைவர்  க. சிதம்பரபாண்டியன் புதுக்கோட்டை நகராட்சி  ஆணையரிடம்  அளித்த மனு விவரம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் முத்தரையர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைத்து தர பலமுறை கோரிக்கை வைத்தும் இது நாள் வரை  நிறைவேற்றப்பட வில்லை.

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தின் வாயிலாக சில தலைவர்களுக்கு சிலை நிறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் கி.பி. 7 -ஆம் நூற்றாண்டு முதல் 9 -ஆம் நூற்றாண்டு வரை முத்தரையர் ஆட்சியின் கீழ் புதுக்கோட்டை இருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கற்றளிக் கோவில்கள் மற்றும் குடைவரை கோவில்கள் அனைத்தும் முத்தரையர் ஆட்சியின் கீழ் கட்டப்பட்டவை ஆகும். முத்தரையர் ஆட்சியின் கீழ் சிறந்து விளங்கிய மன்னர்களில் ஒருவர் 2-ஆம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார். இவர் 16 பெரும் போர்களில் வெற்றியை மட்டுமே கண்ட பேரரசர். தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட முதல் பேரரசரும் இவரே.

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கச் செய்த பேரரசரும் இவரே. தமிழக மக்களுக்கு அனைத்து வழிகளிலும் நல்லாட்சி வழங்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு  புகழ்  சேர்க்கும்  விதமாக  புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் வெண்கல சிலை அமைத்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என வலியுறுத்தியுள்ளார்.

இதில்,மாநில பொதுச் செயலாளர் மதுரை குப்புசாமி,மாநில துணைத் தலைவர், ராமேஸ்வரம் கருப்பையா, மாநில தணிக்கையாளர் எஸ்.  வைத்திலிங்கம்,  மதுரை மாவட்ட செயலாளர் பெ.அழகுமணி, மாவட்ட பொருளாளர் எஸ். வீரையா,  மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வீ.ஆண்டிச்சாமிபொன்னமராவதி ஒன்றிய பொருப்பாளர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top