அர்ஜண்டைனா அரையிறுதியில் தேறி, இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் அல்லது மொராக்காவை சந்திக்கப்போகிறது.
குரொஷியாவிற்கு எதிரான அர்ஜண்டைனாவின் இன்றைய ஆட்டம், ஆடுகளத்தில் ஆதரவாளர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்த அற்புதமான ஆட்டம் என சொல்ல லாம்.
முற்பாதியில் பரபரப்பான ஆட்டம் ஆடிய குரோஷியா, பிற்பாதியிலும், கூடுதல் நேர ஆட்டத்தின் போதும் சோர்வா கவே தெரிந்தது.
லாவகமாக பந்தை தன் அணியின் காலடியில் உருட்டி சென்றாலும் இலக்குகான இடம் வருகிற போது இடறி விழுந்த சோகம் தொடர்கதையாக இருந்தது துரதிஷ்டம். அர்ஜென்டினாவின் திறமையுடன் போட்டியிட போதுமான ஃபயர்பவரை கொண்டிருக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
இந்த தொடரில் ஒரு சிறப்பான ஆட்டத்தை வழங்கிய குரோஷிய அணிக்கு இந்த தோல்வி விரக்தியை தந்தாலும், அவர்கள் ஒட்டுமொத்த போட்டிகளில் வெளிப்படுத்திய செயல்திறனை கால்பந்தாட்ட உலகம் வெகுவாக பாராட்டியே தீரும்.
இந்த போட்டியின் நாயகன் லியோனல் மெஸ்ஸி. உக்கிரமான ஊடக பார்வையில் எந்த ஒரு மோசமான ஆட்ட நிகழ்வும் நிகழ்ந்துவிடாமல் பரபரப்பாக பந்தை, கடைசி நிமிடம் வரை சுழலவிட்ட அழகு சொல்லிக்கொள்ளும்படியாகஇருந்தது.
இன்றிரவு அவர் மீது வைக்கப்பட்ட பெரிய நம்பிக்கையை தகர்த்தெறியவில்லை.குறிப்பாக மூன்றாவது கோல் விழுவதற்கு முன் மெஸ்ஸியின் கால்களில் சுழன்று, பந்து முன்னோக்கி சென்றது ஒரு அற்புதமான காட்சி. ( மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்து கால்பந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்).
சந்தேகத்திற்கு இடமில்லாத சிறப்பம்சமாக இருந்தது, அது ஓடி மூன்றாவது கோலுக்கு உதவியது. மூன்றாவது கோல், அல்வாரெஸால் முடிக்கப்பட்டாலும், லியோனல் மெஸ்ஸி தன் கால்களால் செதுக்கி தந்த கலைப் படைப்பாகும்.It was a moment of genius, that third goal. It was absolutely unbelievable.
மரோடோனாவின் காலத்துக்குப் பின் அர்ஜெண்டைனாஅணி வலுவாக இல்லை என்பதே நிதர்சனம். இன்னும் சொல்லப்போனால் வலிமையற்ற, ஆனால் அதே சமயம் நட்சத்திர ஆட்டக்காரர்களைக் கொண்ட அர்ஜென்டைனா வை இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றதே மெஸ்சியின் அசாத்தியத் திறமை என்பதே நிதர்சனம்.
ஆகவே அர்ஜெண்டைனா அணியின் வெற்றியை/தோல்வியை
வைத்து மெஸ்சியின் சாதனைகளையும், திறமைகளையும் கேள்விக்குள்ளாக்குவது நியாயமற்றது.
அர்ஜெண்டைனா அணி இந்த உலக கோப்பை விளையாட்டில் அழகாக இருக்கிறது; மென்மையான ஆட்டத்தை வெளிப்ப டுத்தி வருகிறது. இறுதிக் கட்டத்திற்கு அவர்கள் இழுத்து செல்லப்பட்டிருக்கிறார்கள்.
பிரான்ஸ் அல்லது மொராக்கோ இவர்களது அழகிய பக்கத்தை வெல்ல விரும்பும் என்பதில் வியப்பில்லை. வியக்கும் படியாக
கோப்பையை அர்ஜண்ட்டைனா தூக்குமானால், அதீத மகிழ்ச்சியில் கொண்டாடி தீர்க்கும் கூட்டத்தில் அடியேனும் ஒருவன்.
…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋