Close
நவம்பர் 22, 2024 12:08 மணி

பொன்னமராவதியில்  பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

புதுக்கோட்டை

பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொன்னமராவதியில்  பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது.

பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொன்னமராவதியில்  பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி இயக்கத்தின் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பொன்-புதுப்பட்டி அரச பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி இயக்கத்தின் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி இயக்கத்தின் மழலை திட்ட மாவட்ட வள பயிற்றுனர் இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வில் பெண் உரிமைகளை பாதுகாப்பது, பாலின பாகுபாட்டைக் களைப்பது,பெண் குழந்தைகளின் சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றிய விழிப்புணர்வை மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

மேலும் பெண்கள் கல்வியை ஊக்குவிப்போம், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல்,குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி முக்கிய சாலை வழியாக பேரணியாக சென்று காந்தி சிலை சென்று பேரணியை நிறைவு செய்தனர்.இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் என 50 -க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top