Close
செப்டம்பர் 20, 2024 6:58 காலை

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில், புறநோயளிகள் பிரிவினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை நகரில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்.எஸ்.ரகுபதி  வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை நகரில் 1851 -இல் தொடங்கப்பட்ட பழைமை யான அரசு மருத்துவமனை, நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1974 -இல் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

அதன்பிறகு, 1917 -இல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பிறகு மாவட்டத் தலைமை மருத்துவமனை அறந்தாங்கி இடம்பெயர்ந்தது. நகரிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவுக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவை மட்டுமாவது இங்கு மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியது .

பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து 100 படுக்கைகள் கொண்ட வட்டார மருத்துவமனையை இங்கு செயல்படுத்துவது தொடர்பான கருத்துரு கோரப்பட்டு அரசின் பரிசீலனை செய்யதது.

இதற்கிடையே தற்காலிகமாக புறநோயாளிகள் பிரிவை மட்டும் இந்த வளாகத்தில் செயல்படுத்துவது என அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டதாக அண்மையில் புதுக்கோட்டை வந்த  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

இதையடுத்து, டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு வெள்ளிக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இந்த மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

இதில், முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே. செல்லப்பாண்டியன்,  நகர்மன்றத் தலைவர்  திலகவதி செந்தில்,  மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம்  அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது:
இந்த இடத்தில் மீண்டும் மருத்துவமனையை செயல்படுத்த முடியாது என கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் கூறினர். தற்போது புறநோயாளிகள் பிரிவு தொடக்கி வைக்கப்பட் டுள்ளது.  இதுவே முதல் வெற்றி.
இதன் மூலம், பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவரும் நேரமும் மிச்சமாகும்.
எனவே பொதுமக்கள் அனைவரும்  இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ள  புறநோயளிகள் பிரிவின் சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  வரும் காலங்களில்  தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனை யாக தரம் உயர்த்துவோம் என்றார் ரகுபதி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top