Close
செப்டம்பர் 20, 2024 6:56 காலை

எண்ணூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சாவில் மர்மம்…?

சென்னை

எண்ணூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் தனசேகர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சாலையில் ஈடுபட்ட கட்சியினர் மற்றும் உறவினர்கள்.

 எண்ணூரில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் தனசேகர்(48) சாவில் மர்மம் இருப்பதாக கூறி வெள்ளிக்கிழமை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 சென்னை எண்ணூர்,  சின்ன எர்ணாவூர் 4-வது தெருவை சேர்ந்தவர் தனசேகர்(48) . வர்ணம் பூசம் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவொற்றியூர் தொகுதி செயலாளரான
இவருக்கு தீபா என்ற மனைவியும் பிரவீன் ஒரு மகனும் உள்ளனர். தீபாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  தனசேகர் சின்ன எர்ணாவூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். அவரது மனைவி தீபா தனது மகன் பிரவீனுடன் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில்  வியாழக்கிழமை பூட்டிய வீட்டில்தனசேகர்  சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அருகில் வசித்தோர் அளித்த தகவலின் பேரில் எண்ணூர் காவல் நிலைய போலீசார்.
தனசேகரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வுக்கு பிறகு வெள்ளிக்கிழமை தனசேகரின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் தனசேகரின் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இறப்பதற்கு முன்பு தனசேகரின் தங்கை கணவர் சீனிவாசன்தான் அவரோடு இருந்துள்ளார்.  மேலும் அவரது சடலம் கண்டறியப்பட்ட பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார்.
எனவே தனசேகர் சந்தேகத்திற்கு இடமின்றி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சாவில் மர்மம் இருக்கிறது.  எனவே இச்சம்பவத்தை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அதுவரை தனசேகரின் சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் அன்பு செழியன் தலைமையில் தனசேகரின் உறவினர்கள் மற்றும் கட்சியினர்  அம்பேத்கர் நகர் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த  எண்ணூர் சரக காவல் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையில் விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து மறியலை கைவிட்ட உறவினர்கள் பின்னர் தனசேகரின் சடலத்தை நல்லடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து எண்ணூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிளாஸ்டின் டேவிட் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top