Close
நவம்பர் 22, 2024 2:29 மணி

கிறிஸ்துமஸ்- புத்தாண்டுக்காக புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனத்தில் பிரமாண்டமாகத் தயாராகும் பிளம் கேக்…!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனத்தில் நடைபெற்ற பிளம் கேக் தயாரிக்கும் பணியை பார்வையிட்ட நிர்வாகி அருண்ராஜ்

ஓவ்வொரு ஆண்டின் இறுதியில் டிச. 25 -ல்  கிறிஸ்து பிறப்பு விழா கிறிஸ்தவ மக்களாலும் , ஜனவரி. 1  ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பு கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விழாக்களாகும்.
.
கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு நினைவுக்கு  வருவது கேக் தான். அதில், பிளம் கேக் என்பது மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் கேக் வகையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் மிகவும் அதிகமாக விற்பனையாவதும் இந்த கேக் வகைதான்.
பிளம் கேக் என்பது டிரை ப்ரூட்ஸ் அல்லது பழங்களிலோ செய்யப்பட்ட கேக்குகளின் வகையைச் சேர்ந்தது. பிரபலமான பிளம் கேக்குகள் மற்றும் புட்டிங் கேக்குகள் என பல வகை கேக்குகள் உள்ளன. இந்தியாவில், கிறிஸ்துமஸ் விடுமுறை காலங்களில் இது  அதிக அளவில் தயாரிக்கப்படு கிறது.

வெளிநாடுகளில் இந்த வகை பிளம் கேக்,  ரம், ஒயின் அல்லது பிராந்தி, ஆல்கஹால் இல்லாத ரம் போன்ற கூடுதல் பொருட்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பேக்கரிகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக டன் கணக்கில் பிளம்கேக் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பேக்கரி தயாரிப் பில் புதுக்கோட்டையில் கோலோச்சி வரும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தில் பிளம் கேக் தயாரிக்கும் பணி  நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேக்கரி மஹராஜ் உரிமையாளா் அருண்ராஜ் கூறியது: கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கேக் வகைகள்தான். அதில், குறிப்பாக பிளம் கேக் என்பது மிகவும் பிரபலமான  கேக் வகையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் மிகவும் அதிகமாக விற்பனையாவதும் இந்த கேக் வகைதான்.

புதுக்கோட்டை
பிளம் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்

இதற்காக, உலா்ந்த வெள்ளை மற்றும் கருப்பு திராட்சை , டூட்டி- புரூட்டி, இனிப்பு இஞ்சி சிப்ஸ், முந்திரிப் பருப்பு உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து ஆயிரம் கிலோ அளவில் ஒன்றாகக் கலக்கி ஆல்கஹால் இல்லாத ஒயின் சேர்த்து இந்த பிளம் கேக் தயாரிக்கப்படுகிறது.

எங்கள் நிறுவனத்தின் பணியாளா்கள்  கேக் தயாரிக்கும் கூடத்தில் வைத்து  இவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   மைதா, சா்க்கரை, வெண்ணெய் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பழக்கலவையையும் சோ்த்து தயாரிக்கப்படுகிறது. இவற்றுடன், ஏலக்காய், கிராம்பு, சாதிபத்திரி போன்ற வாசனை பொருள்களையும் அரைத்து சோ்க்கும்போது பிளம் கேக்கின் சுவை கூடுகிறது.

பொதுவாக ஒயின், ரம் கலந்துதான் ‘பிளம் கேக்’ தயாரிக்கப் படும். தற்போது சிறிய குழந்தைகளும் எங்களது கேக்கை ருசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆல்கஹால் இல்லாத ஒயின் வாங்கி இதில் கலக்கிறோம். கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை சுமாா் 3000 கிலோ பிளம் கேக் தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அருண்ராஜ்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top