மறைந்த தமிழறிஞர் முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதனுக்கு தமிழ்ச் செம்மல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 -ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மறைந்த தமிழறிஞர் முனைவர் வீ. கே.கஸ்தூரிநாதன் தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறை, வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் 35 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கோட்டை கம்பன் கழக இணைச் செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
மிகச்சிறந்த இலக்கிய பேச்சாளர். எழுத்தாளர். நல்ல மரபுக்கவிஞர். 1. தனிமனித தியாகங்கள், 2. இந்திய இளைஞனே உன் கடமைகள் இவை 3. பெண்ணுக்கு உரிமை தாரீர் 4.இன்னொரு சுதந்திரப் போர் 5. நேர்மை ஒரு குற்றமா? 6.அவள் சின்னப்பெண்ணா..? 7. அட்சய பாத்திரத்தில் அழுக்குப்படியாது.. !.
8.வீரத்தின் விளைநிலம் எங்கள் பாரதம் 9. மறுமலர்ச்சி கவிஞர்களின் உணர்ச்சிமிகு பாடல்கள் 10. இயற்கை வளங்களை போற்றுவோம். 11. கம்பன் காலடியில் ஓடிய கவிதை ஆறு 12. கம்பன் காட்டும் மனிதநேயம் (இது அவரின் மறைவிற்குப்பின்னர்,அஞ்சலிக்கூட்டத்தில்வெளியிடப்பட்டது) ஆகிய நூல்களின் ஆசிரியர். கொரோனா பலி கொண்ட தமிழறிஞர்களில் இவரும் ஒருவர்.