கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் ஏ ஐ டி யு சி அகில இந்திய 42 வது மாநாட்டில் பங்கேற்க செல்லும் மாநில பிரதிநிதிகளை ரயில் நிலையத்தில் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த பின்பும் மக்களுக்கு அடிப்படை தேவைகளான இருக்க இடம், உணவு, குடிநீர், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இவை எதுவும் நிறைவேற்றப் படவில்லை.
நாட்டில் எண்பது சதவீதத்திற்கு அதிகமான மக்கள் ஒரு நேர உணவுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை யில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சாசனப்படி அனைவருக்கும் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்திருக்கப்பட வேண்டும்.
ஆனால் மத்தியில் ஆட்சி செய்து வந்த அரசுகள் உழைக்கின்ற ஏழை, எளிய, நடுத்தரமக்கள் மற்றும் தொழிலாளர்கள் விவசாயிகளைப் பற்றி, கவலைப்படவில்லை. கடந்த எட்டு வருடங்களாக ஆட்சி செய்து வரும் ஒன்றிய பிஜேபி மோடி அரசில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வந்து கொண்டி ருக்கின்றது. சிறு ,குறுதொழில்கள் நசுக்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை செய்கின்ற மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகள் பெரு நிறுவனங் களுக்கு தாராளமாக விற்கப்படுகின்றன, தனியார் மயமாக் கப்படுகின்றன, இதனால் ஒட்டுமொத்த மக்களும் துன்பம் அடைந்துள்ளனர்.
மோடி அளித்த தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணமும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு,புதிய பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி, நாட்டின் வளர்ச்சிக்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் இல்லை.
இந்திய அரசியலமைப்புக்கு எதிராக மதச் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் கொடுமைப்படுத்தப் பட்டு வருகின்றனர், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மோடி அரசுக்கு எதிராக பேசியவர்கள், எழுதியவர்கள் ஒன்று கொல்லப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பறிக்கப் படுகின்றன, தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டங்கள் சுருக்கப்பட்டு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தப் பட்டுள்ளன, இந்து மத வெறி செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு மாற்றாக ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் ஏ ஐ டி யு சி அகில இந்திய 42வது மாநாட்டிலே தொழிலாளர்கள், உழைக்கின்ற மக்கள், விவசாயிகள் என அனைத்து மக்களையும் திரட்டு வதுடன், அனைத்து ஜனநாயக சக்திகளையும் திரட்டி ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க திட்ட மிடப்படுகிறது.
அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏஐடியுசி மாநிலச் செயலாளர்கள் சி.சந்திரகுமார், ஆர்.தில்லைவனம், தஞ்சை மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்ட துணைத்தலைவர் அ.சாமிக்கண்ணு, மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன் ஆகியோர் நேற்று இரவு எர்ணாகுளம் விரைவு ரயிலில் புறப்படுகின்றனர். இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் தஞ்சை ரயிலடியில் நடைபெற்றது.
நிகழ்வில் உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத்தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன், பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாத்துரை, நிர்வாகிகள் எம்.வெங்கடபிரசாத், அ.இருதயராஜ்.
நுகர்பொருள் வாணிபகழக சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தியாகராஜன், சிபிஐ மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிர மணியன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மருத்துவர் ச. சுதந்திர பாரதி, தெருவியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக் குமரன்.
உடல்உழைப்பு சங்க நிர்வாகி கல்யாணி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், அரசு போக்கு வரத்து சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், கட்டுமான சங்க துணைத் தலைவர் பி.செல்வம் உள்ளிட்டு பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.