பள்ளி பாடத்திட்டங்களில் மதவாத கருத்துகள் திணிப்பதை கைவிட வேண்டுமென வலியுறுத்தி ஏஐடியூசி அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் கடந்த டிசம்பர் 16 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்ற ஏஐடியூசி 42 -ஆவது அகில இந்திய நான்காவது நாள் மாநாடு அகில இந்திய தலைவர் ரமேந்திரகுமார் , செயல் தலைவர் கே.வி.மகாதேவன், அகில இந்திய பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநாட்டில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கார்ப்பரேட் பெருநிறுவனங் களுக்கு ஆதரவாக, தொழிலாளர் களின் உரிமைகள் மற்றும் தொழிலாளர் நல சட்டங்கள், தொழிற்சங்க சட்டங்கள் திருத்தம் செய்து, பறிப்பதை கண்டிப்பது.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் அனைத்து மாநிலங்களிலும் முறையாக அமல்படுத்தவும், ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள இஷ்ராம் திட்டத்தால் மாநில அரசில் தலையிட்டு, மாநில அரசின் நல வாரிய திட்டங்களை சீர்குலைப்பது குறித்தும்.
மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டு களுக்கு தாரை பார்க்கப்படுவது, தனியார்மயமாக்கப்படுவது, பங்குகளை விற்கப்படுவது குறித்தும், ஏ ஐ டி யு சி தொழிற் சங்க அமைப்பை விரிவுபடுத்தி வலுப்படுத்துவது, பெருவாரி யான இளைஞர்களை அமைப்புக்குள் கொண்டு. வருவதற் கான திட்டங்கள் குறித்து நான்கு தலைப்புகளில் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்தியா பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம், தேசிய செயலாளர்கள் டி.எம்.மூர்த்தி, வகிதா நிஜாம், அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் ஶ்ரீ.குமார் உள்ளிடோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.
நான்காவது நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்திய அரசு கொள்கை முடிவெடுத்து லட்சகணக்கான பள்ளிகளை மூடுவதை நிறுத்த வேண்டும், பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும், பாடத்திட்டங்களில் மதவாத கருத்துகளை திணிப்பதை கைவிட வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் விவாதித்து முடிவுக்கு வரவேண்டும், வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிதித்துறை நிறுவனங்கள் நாட்டில் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்கின்றன, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளன, வளர்ச்சி என்பது பொதுத் துறை நிதி நிறுவனங்களின் வளர்ச்சி பொறுத்தே அமைகிறது.
இந்திய அரசு வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங் களை பலப்படுத்த வேண்டும், தனியார் மயமாக்குவதை உடனடியாக கைவிட வேண்டும், சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் புதிய மின்சார திருத்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த சட்ட திருத்தம் எதிரானது என்பதால், மின்சார சட்ட திருத்தம் 2021 திரும்பப் பெற வேண்டும், மின்சார வாரியங்களை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, மத்திய ,மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈபிஎப் மூலமாக வழங்கப்படுகின்ற பென்ஷன் தொகை குறைந்தபட்சம் ரூ.1000 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்பட வேண்டும், அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியத் துடன் சேர்த்து வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் அடிப்படை உரிமை என்ற அடிப்படையிலும் வயதான காலத்தில் மிகுந்த கஷ்டங்களில் இருக்கின்ற ஓய்வூதியர்களின் நிலைகளை பரிவுடன் பரிசீலித்து ஒன்றிய அரசு உடனடியாக ஒருங்கிணைத்த முறையில் ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.