Close
நவம்பர் 23, 2024 3:05 காலை

விருதுநகர் மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் காவலன்’ செயலி திட்டம்: எஸ்பி தொடக்கி வைத்தார்

விருதுநகர்

புதிய செயலியை அறிமுகம் செய்து போலீஸாரின் ரோந்து பணியை தொடக்கி வைத்த விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகர்

விருதுநகர் மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் காவலன்‘ செயலி திட்டத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் காவலன்’ செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தொடக்கி வைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மேற்கு, கிழக்கு, பஜார், அருப்புக்கோட்டை நகர், ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு, திருத்தங்கல், திருவில்லிபுத்தூர் நகர், சாத்தூர் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஸ்மார்ட் காவலன் செயலி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பணியில் இருக்கும் போலீசார், இந்த செயலியின் மூலம் தகவல்களை விரைவாக பெற்று, குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். பணியில் உள்ள போலீசாருக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலும் இந்த செயலி மூலம் விரைந்து செயல்பட முடியும்.

போலீசாரின் ரோந்து பணிகள், குற்றச் சம்பவங்களை உடனடியாக பதிவு செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட் காவலன் செயலியில் ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றார் அவர். இது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனப் பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மனோகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top