Close
நவம்பர் 22, 2024 5:30 மணி

குடியாத்தத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேலூர்

திமுக அரசைக்கண்டித்து குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவிப்பிற் கிணங்க, சொத்து வரி, வீட்டு வரி, பால் விலை, மின்சார கட்டண உயர்வு என மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசை கண்டித்து வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதன்கிழமை குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தார். மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அமுதா சிவப்பிரகாசம், காடை மூர்த்தி, வடக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.சிவா.

பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் டி.பிரபாகரன், கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன், நகர துணைச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், நகரமன்ற துணைத் தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி, வி.இ.கருணா, மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.என்.சுந்தரேசன், எம்.கே.சலீம், அட்சயா வினோத்குமார்.

 மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எஸ்.ஐ.அன்வர் பாஷா, மு.நகரமன்ற து.தலைவர் எஸ்.டி.மோகன்ராஜ், பேர்ணாம்பட்டு ஒன்றிய இணைச் செயலாளர் மசிகம் கோ.பரிதா, ஜி.தேவராஜ், எஸ்.எஸ்.ரமேஷ்குமார், பி.எச்.இமகிரி பாபு, மாலிப்பட்டு எம்.சி.பாபு, எச்.ரித்தீஷ்.

நகர மன்ற உறுப்பினர்கள் கே.லாவண்யா குமரன், ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் கலந்து கொண்டு கண்டன பேரூரை ஆற்றினார்.

மேலும், ஆர்பாட்டத்தில் வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர பொருளாளர் தனஞ்செயன், நகர அவைத் தலைவர் எஸ்.ஆர்.அன்பு, மு.நகரமன்ற தலைவர் மாயா.பாஸ்கர், ஒன்றிய கழகச் செயலாளர் வி.ராமு, எஸ்.இமயவரம்பன், வி.என்.சிவப்பிரகாசம், பொரிக்கடை பாலாஜி மற்றும் மெடிக்கல் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

…வேலூர் நிருபர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top