Close
நவம்பர் 22, 2024 6:09 மணி

குடியாத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

வேலூர்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் குடியாத்தம் டவுன், தென்குளக்கரை பெரியார் திடலில் நடந்தது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் குடியாத்தம் டவுன், தென்குளக்கரை பெரியார் திடலில் நடந்தது.

நகரமன்ற தலைவரும் நகர கழக செயலாளருமான செளந்தரராஜன் தலைமை  வகித்தார். நகர கழக அவைத் தலைவர் நெடுஞ்செழியன், நகர துணைச் செயலாளர்கள் ஜம்புலிங்கம், நகரமன்ற உறுப்பினர் மனோஜ், வசந்தா ஆறுமுகம், நகர பொருளாளர் முன்னா, மாவட்ட பிரதிநிதிகள் கவிஞர் பாரி, பெரிய.கோட்டீஸ்வரன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர மாணவரணி அமைப்பாளர், நகரமன்ற உறுப்பினர் அர்ச்சனா நவீன்சங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர்  பேசுகையில், தி.மு.கழகம் எம்.ஜி.ஆரால், சம்பத்தால், வைகோவால் சந்தித்த மூன்று பெரும் பிளவுக ளிலும், தடம் மாறாமல், தடுமாறாமல் கலைஞருக்கு உற்ற துணையாக விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன் என்றும்,
அவசர நிலை காலத்தில் தி.மு.க பெயரை, கொடியை, சின்னத்தை கடைசி வரையில் பாதுகாக்க கலைஞருக்கு தோள் கொடுத்தவர் பேராசிரியர் அன்பழகன் என்றும்,
அண்ணாவுக்கு பிறகு கழகத்தை வழிநடத்த கலைஞரையும், கலைஞருக்கு பிறகு கழகத்தை வழிநடத்த தளபதி மு‌.க.ஸ்டாலினையும் அடையாளம் காட்டியவர் பேராசிரியர் அன்பழகன் என்றும் பல்வேறு வரலாற்று ஆதாரங்களுடன் உரையாற்றினார்.

இதில், வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட அவைத் தலைவர் தி.அ.முகமதுசகி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன், ஒன்றிய பெருந்தலைவர் என்.இ.சத்தியா னந்தம்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி.எஸ்‌.அரசு, எஸ்.பாண்டி யன், ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர் கே.ரவி, நத்தம் வி.பிரதீஷ், அ.அன்பரசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.கண்ணன், பேர்ணாம்பட்டு நகர கழக செயலாளர், ஆலியார் ஜூபேர் அகமது, ஒன்றிய கழக செயலாளர் கே.ஜனார்த்தனன்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் இராஜமார்த்தாண்டன் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், வேலூர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.சுந்தர் நன்றி கூறினார்.

…வேலூர் நிருபர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top