Close
நவம்பர் 22, 2024 2:05 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாடு சோதனை ஆராய்ச்சி திட்டத்தை பார்வையிட்ட பிரிட்டிஷ் தூதரக அலுவலர்கள்..

புதுக்கோட்டை

பிரிட்டிஷ் தூதரக அலுவலர்கள் மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாடு சோதனை ஆராய்ச்சி திட்டத்தை பார்வையிட்டனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மக்காச் சோள படைப்புழு கட்டுப்பாடு சோதனை ஆராய்ச்சி திட்டத்தை பிரிட்டிஷ் தூதரக அலுவலர்கள் பார்வையிட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மறமடக்கி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பு மேலாண்மை திட்ட சோதனை ஆராய்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான கருத்தரங்கம் மறமடக்கி விவசாயி க. பதி தோட்டத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ராஜமனோகரி தலைமை வகித்தார். புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசுகையில்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத் தப்பட்டு வரும் செயல்பாடுகள் பற்றியும் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனம் சர்வதேச ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தும் நவீன இனக் கவர்ச்சிப்பொறி சோதனை ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வேளாண் துறை வழங்கும் எனவும்  குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக பிரிட்டிஷ் தூதரக பிரிட்டிஷ் மற்றும் இந்திய அறிவியல் மற்றும் புதுமை இணைப்பு தலைவர் சாரா பேலன் மற்றும் புதுமைக்கான ஆலோச கர் சுவாதி சக்சேனா ஆகியோர் பங்கேற்றார்கள்.

இதில் சாரா பேலன் பேசியதாவது:  இந்தியா மற்றும் பிரிட்டிஷ் நாடுகளுக்கிடையே நலதுரவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்காச்சோளப் படைப்புழுவை கட்டுப்படுத்த சென்சார் வசதியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைத் திட்டத்தில் பிரிட்டிஷ் தூதரகமும் ஒரு பங்காளராக இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.

புதுக்கோட்டை

இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பை இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும். உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறையினருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் ஒருங்கி ணைந்து இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் சோதனை ஆராய்ச்சி திட்டம் என்ற தலைப்பில் பேசியதாவது:
படைப்புழு என்பது அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அதிக சேதத்தை உண்டாக்கக்கூடிய ஒரு அழிவுகரமான பூச்சியாகும். தற்போது இப்பூச்சியானது மக்காச்சோளத்தில் மிகுதியான பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. இப்படைப் புழுவானது மக்காச் சோளத்தின் முதன்மையான பூச்சிகளில் ஒன்றாகும்.

 

இப்புழுவைக் கட்டுப்படுத்த அதிகப்படியான இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு, நன்மைதரும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைப்பு, மண் வளம் குன்றுதல் மற்றும் இரசாயன எச்சம் மிகுந்த மக்காச்சோள உற்பத்தி போன்ற பல்வேறு தீமைகள் உண்டாகின்றன.

மேற்கண்ட இரசாயன இடுபொருட்களை குறைத்து சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத உணவு உற்பத்தி பெருக்கத் திற்கு மாற்று பூச்சிக்கட்டுப்பாடு முறைகளான உயிரியல் கட்டுப்பாடு , இயந்திரவியல் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படு பயன்படுத்த வேளாண்மை துறையின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை

இனக்கவர்ச்சி பொறியானது படைப்புழுவின் உற்பத்தி மற்றும் எண்ணிக்கையை முன்கூட்டியே அறிவதற்கும், சேதத்தை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்பொழுது புனல் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தப்படு கின்றது. இப்பொறியில் பூச்சிகளின் எண்ணிக்கையை தினசரி நேரில் சென்று பார்த்து தரவுகளை சேகரித்தாக வேண்டும்.

அதற்கு மாற்றாக மின்னணு உணர்திறன் கொண்ட இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்த சோதனை ஆராய்ச்சி திட்டம் மரமடக்கி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை தரவுகளை கணினி, மடிக்கணினி மற்றும் கைபேசி மூலம் எந்த இடத்தில இருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும்.

மேற்கண்ட புதிய இனக்கவர்ச்சி பொறியானது, தற்போது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாராய்ச்சியின் முடிவில் ஒரு சிறந்த மின்னணு உணர்திறன் கொண்ட இனக்கவர்ச்சி பொறி உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது என்றார் ராஜ்குமார்.

நிகழ்ச்சியில் வம்பன் தேசிய பயறுகள் வகை ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் விஞ்ஞானி ராஜா ரமேஷ், புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பூச்சிகள் இணைப் பேரசிரியர் எஸ் வினோத்குமார், வேளாண்மை அலுவலர் முகமது ரபி ஆகியோர் சென்சார் இன கவர்ச்சி பொரி மூலம் ஏற்படும் நன்மைகளை விளக்கி பேசினார்கள்.
எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப் பாளர் டி. விமலா வரவேற்புரை நிகழ்த்தினார். தொழில்நுட்ப அலுவலர் வினோத் கண்ணா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top