கந்தர்வகோட்டை அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது
புதுக்கோட்டைமாவட்டம்,கந்தர்வகோட்டைவட்டம்,. நொடியூர் அருள்மிகு ஆதிநாதர் மற்றும் ஆதிவிநாயகர் திருக்கோயி லுக்கு சொந்தமான நொடியூர் கிராமத்திலுள்ள 152 ஏக்கர் அளவிலான நிலங்கள் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தினை திருக்கோயில் வசம் ஒப்படைக்காவிடில் 1959 -ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டம் பிரிவு 78 -இன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருக்கோயில் செயல் அலுவலர் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் மேற்படி நிலத்தினை திருக்கோயில் வசம் ஒப்படைக்கவும் இந்து சமய அறநிலைய துறை விதிகளுக்கு உட்பட்டு நடப்போம் எனவும் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர்..
இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி. அனிதா தலைமையில், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் ரெத்னாவதி, திருக்கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரன் புதுக்கோட்டை சரக ஆய்வாளர் திவ்யபாரதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சண்முகசுந்தரம், ராம்கி, பழனிவேல், பாக்யராஜ் ஆகியோர் (22.12.2022 ) நேரில் சென்று ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ. 10 கோடி மதிப்புள்ள 152 ஏக்கர் நிலத்தை திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து அங்கு அறிவிப்புப்பலகையை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டை வட்டம், நொடியூர் கிராமம் அருள்மிகு ஆதிநாதர் மற்றும் ஆதி விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை திருக்கோவில் சுவாதீனம் கொண்டு வரப்பட்ட போது