Close
நவம்பர் 22, 2024 1:09 காலை

தூய்மை இந்தியா 2.0 … நேரு யுவகேந்திரா சார்பில் சுவர் ஓவியம் வரைந்த இளைஞர்கள்..

புதுக்கோட்டை

புதுகை நகராட்சி சுற்றுச்சுவற்றில் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நேரு யுவகேந்திரா இளையோர்கள்

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து தூய்மை இந்தியா 2.0 எனும் தலைப்பில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி கட்டிட சுற்றுச் சுவரில் பல்வேறு வண்ண ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் சுற்றுச் சூழல். மரக் கன்றுகள் நடுதல், உடற்பயிற்சி, தமிழ் கலாச்சாரம், நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளம் பாதுகாத்தல் போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மற்றும் புதுக்கோட்டை நகராட்சி ஆகிய அமைப்புக்களின் வழிகாட்டுதலில், ஓவியர் அஜீத்குமார் மற்றும் ஜனார்த்தனன் 10 பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து இந்த ஓவியங்களை தன்னார்வ தொண்டாக வரைந்துள்ளனர்.

நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம், சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றத்தைச் சார்ந்த ராஜ்குமார் மற்றும் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் வாசு ஆகியோர் ஓவியம் வரைதலில் ஈடுபட்ட இளையோர் அனைவரையும் பாராட்டினர்.

இது குறித்து நேரு யுவ கேந்திரா  திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம்  கூறியதாவது:

தூய்மை இந்தியா 2.0 விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்புதுக்கோட்டை நேரு யுகேந்திரா மற்றும் விவேகானந்தர் மன்ற இளைஞர்கள் ஊதியம் ஏதும் பெறாமல் புதுக்கோட்டையில் உள்ள அரசு அலுவலக சுற்றுச்சூழல் இயற்கை மற்றும் வாழ்வியல் மழைநீர் சேகரிப்பு மரம் வளர்ப்பு பற்றிய அழகான ஓவியங்களை வரைந்து வருகின்றனர்

இதில், சுற்றுச்சூழல் சுகாதாரம் மழை நீர் சேகரிப்பு மரம் வளர்ப்பு ஆகியவற்றின் அருமை குறித்து அரசு அலுவலக சுற்றுச் சுவர்களில் அழகான ஓவியங்களுடன் விழிப்புணர்வு வாசகங்களை தன்னார்வல இளைஞர்கள் வரைகின்றனர்.

இந்தப் பணிகளுக்காக இவர்கள் பணம் ஏதும் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பொதுமக்களிடம் பொது சுகாதாரம் மழைநீர் சேகரிப்பு மரம் வளர்ப்பு சாலை விதிமுறைகள் பற்றி அரசு அலுவலக வளாக சுற்று சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் வரையும் ஓவியங்கள் காண்போரை கவர்ந்து வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top