Close
செப்டம்பர் 20, 2024 4:13 காலை

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பெருந்துறையில் மாரத்தான் ஓட்டம்

ஈரோடு

பெருந்துறையில் எம்எல்ஏ ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க உடற்பயிற்சி அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி பெருந்துறையில் மராத்தான் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மரத்தான் ஓட்டப்பந்தயம் நகரில் 5 கிலோ மீட்டர்  தொலைவுக்கு நடைபெற்றது.
பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் இன்ஸ்பெக்டர் மசுத்தா பேகம் ஆகியோர் ஓட்டத்தை துவக்கி வைத்தனர்.
பெருந்துறை பேருந்து நிலையத்தில் புறப்பட்ட மரத்தான் ஓட்டம் பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை வழியாக தோப்புபாளையம் சாலையில் சென்று சென்னிய வலசு வழியாக ஈரோடு சாலை வந்தடைந்து, குன்னத்தூர் நால்ரோட்டில் சென்று செல்லாண்டியம்மன் கோயில் வழியாக மீண்டும் புதிய பஸ் நிலையத்தை வந்து அடைந்தது.

13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் என மூன்று பிரிவுகளாக இப் போட்டியில் 850 பேர் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் சிவா,பெண்கள் பிரிவில் தருணா,
குழந்தைகள் பிரிவில் சஞ்சித் ஆகியோர் முதல் பரிசை பெற்றனர்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூபாய் 5000 மற்றும் சைக்கிளும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 3000, மூன்றாம் பரிசாக 2000 வழங்கப்பட்டது. மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை எம்எல்ஏவின் தொண்டு நிறுவனமான ஜே.கே மூங்கில் காற்று அறக்கட்டளை, பிரத்விக் பேஷன், கெட் பெட் ஸ்டுடியோ,ஏ ஸ்கொயர் ஸ்போர்ட்ஸ் அகாடமி, பெருந்துறை சர்ஜிகல்ஸ், டாக்டர் யசோதரன், ராகுல் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர். முடிவில் யுவநித்யா நன்றியுரை வாசித்தார். நிகழ்ச்சியில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top