புதுக்கோட்டையில் தமிழ்நாடு மராட்டா சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்நடைபெற்றது .
புதுக்கோட்டையில் தமிழ்நாடு மராட்டா சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ மீனாட்சி திருமண மஹாலில் தலைவர் எஸ் கண்ணூராவ் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் எஸ் சுரேஷ் 2019 முதல் 2022 -ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையையும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் ஆக்க பணிகளையும் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.
இச்சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை 1 12 2019 முதல் 30 11 2022 வரை நிதி அறிக்கையை பொருளாளர் அசோக் ராவ் வாசித்தார்.
தஞ்சை மூத்த இளவரசர் எஸ். பாபாஜி ராஜ போன்ஸ்லே, சத்ரபதி சிவாஜி ஆகியோரது உருவப் படத்தினை திறந்து வைக்கப்பட்டது. 2022 -ஆம் ஆண்டின் 10-ஆம் வகுப்பு 12 -ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவ மாணவிகள் பி சபரிநாதன், தருண்குமார் ,பாலமீனாபாய், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஜீவிதா ஆகியோருக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது,
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் உள்ள பிராமணர் அல்லாத மராட்டிய இன மக்களை மிகவும் பிற்பட்டோர் (எம் பி சி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறறப்பட்டன.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகளில் தலைவர் எஸ் கண்ணூராவ், உபதலைவர் ஆர் குமார் ராவ், செயலாளர் எஸ் சுரேஷ் ராவ், இணை செயலாளர் ஆர் பாலச்சந்திர ராவ், பொருளாளர் டி அசோக் ராவ், அமைப்புச் செயலாளர் டி .எஸ். மோகன்ராஜ்.
உறுப்பினர்களாக டி. குமார் ராவ், பி பிரகாஷ் ராவ், ஆர். அர்ஜுன் ரா, எஸ். ஆத்மநாதராவ், பி புருஷோத்தமராவ் கணேஷ் ராவ் எஸ் ஜெகநாதராவ் ஏ பிரபாகரன் ராவ் கே ஆனந்த்ரா முகேஷ் ராவ் ஆர் ஜான்சி பாய் உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இணைச் செயலாளர் பாலச்சந்திர ராவ் நன்றி கூறினார்.