Close
செப்டம்பர் 20, 2024 3:33 காலை

புதுக்கோட்டை அருகே இறையூரில் தலித் மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை  கலந்த கொடுமை

புதுக்கோட்டை அருகே இறையூரில் தலித் மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை  கலந்த கொடுமை குறித்து  கந்தர்வகோட்டை எம்எல்ஏ  சின்னதுரை  நேரில் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே ஆதிதிராவிடர் மக்களுக்கான குடிநீரில் மனிக்கழிவு  கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கைவயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்ப மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம    னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களைப் பரிசோ      தித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்சனை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நீர்த்தேக்க தொட்டியில்; திங்கள்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மனிதக்கழிவு (மலம்) கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கந்தர்வ                   கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும், அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தெரிவிக்கையில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்தம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி ஆதிதிராவிடர் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இழிவான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து இதுபோன்ற இழிவான சம்பவம் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்  தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி  இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் பிரத்யேகமாக குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. தொட்டியின் மேலுள்ள மூடியைத் திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, வேண்டுமென்ற இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம் என்றனர்.

இதனைத் தொடர்ந்து குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி மக்களக்கு மாற்றுக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில்தான் உண்மை நிலை தெரியவரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top