Close
செப்டம்பர் 20, 2024 5:52 காலை

குடியாத்தம் அருகே கிறிஸ்துமஸ் விழா… அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வேலூர்

குடியாத்தம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள்

குடியாத்தம் அருகே  தேவாலயத்தில் நடந்த  கிறிஸ்துமஸ் விழாவில்  வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஊராட்சி சத்யா நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்மஸ் விழா பாஸ்டர் ஜேம்ஸ் பரந்தாமன் தலைமையில்  விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் ஆராதனை முடிந்து குழந்தைகளின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட  செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் எஸ்.கோதண்டன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ்  வாழ்த்துரை வழங்கி பேசுகையில்,

பிறரிடம் அன்பு செலுத்தவும் பாவிகளை மன்னிக்கவும் நமக்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் வழியில் அனைவரும் நடக்க வேண்டும். ஏழு முறை மட்டுமல்ல, 70 ஆயிரம் முறையும் மன்னிக்க வேண்டும் என்று நல்ல கருத்தினை போதித்த அவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசு வழங்குவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன் என்று குறிப்பிட்டார்.

பின்னர் அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கும், தூய்மை காவல் பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும் வழங்கினார். இறுதியில்  குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி  அனைவருக்கும் கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

விழாவில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் தேவிகா, மாவட்ட  பொருளாளர் ஜெயகுமார், அக்ராவரம் ஊராட்சி மன்ற தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் முனிசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் மதனா ராஜீவ்காந்தி, சிகாமணி.

திருச்சபை செயலாளர் பிரசாந்த், குடியாத்தம் ஒன்றிய கழக செயலாளர் ஹரிவிஜய், ஒன்றிய கழக இணை செயலாளர் லலிதா, திருச்சபை ஆயரின் துணைவியார் லக்ஷ்மி ஜேம்ஸ் பரந்தாமன், ஒன்றிய  துணை செயலாளர் சக்தி, தட்டப்பாரை ஊராட்சிகிளை செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

கிறிஸ்துமஸ் விழாவில் திருச்சபை அங்கத்தினர்கள், அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளா னோர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அக்ராவரம் ஊராட்சியில் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ் தலைமையில் நிகழ்ச்சியில் ஊராட்சி கழக செயலாளர் தாமு, நடராஜன் மற்றும் ஊர் மக்கள் ஒன்று திரண்டு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அப்பகுதி மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

….வேலூர் – நிருபர்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top