Close
நவம்பர் 22, 2024 4:02 மணி

வேலூரில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை..

வேலூர்

வேலூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தெரு நாய்களுக்கான கருத்தடை முகாம்

வேலூர் மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் முகாம்  நடைபெற்றது

வேலூர் மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாக மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், வேலூர் மாநகராட்சி மற்றும் வேலூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கமும் இணைந்து தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

வேலூர் புதிய பேருந்து நிலைய முத்து மண்டபம் அருகே உள்ளம கால்நடை அறுவைச்சிகிச்சை மையத்தில் நடைபெற்ற முகாமை   வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமை  தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது : வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் சுமார் 12 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக தெரிய வருகிறது. அந்த நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக 1,200 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சைக்கு பின் அந்த நாய்கள் மீண்டும் பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே விடப்படும். இதற்காக தற்போது ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நாய்க்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள சுமார் ரூ.1,650 செலவாகும். இதில் ரூ.825 மாநகராட்சி சார்பில் செலவிடப்படுகிறது.

வேலூர்

மீதமுள்ள தொகை பிராணிகள் வதை தடுப்பு சங்கம் பங்களிக்கிறது. கருத்தடை செய்த பின்பு 3 நாட்கள் நாய்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும். கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நாய்களுக்கு நோய் பரவலை கட்டுபடுத்தவும், வெறி, சொறி நோய் பாதிப்புக் குள்ளான நாய்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் குறித்து அந்தந்த பகுதி பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நாய்களுக்கு பொதுமக்கள் மனிதாபிமானத்தின் அடிப்படை யில் உணவு, தண்ணீர் வழங்க வேண்டும் என்றார் அவர். இதில்,  துணை மேயர் சுனில் குமார், கமிஷனர் அசோக் குமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், பிராணிகள் வதை தடுப்பு சங்க உறுப்பினர்கள் குமரேஸ்வரன், ருக்ஜி ராஜேஷ், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

==வேலூர் – நிருபர்==

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top