Close
செப்டம்பர் 20, 2024 3:41 காலை

பேர்ணாம்பட்டு அருகே பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகள்…!

வேலூர்

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே உள்ள மசிகம் கிராமத்தில் பசுவிடம் பால்குடிக்கும் ஆட்டுக்குட்டிகள்

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே உள்ள மசிகம் கிராமத்தில் ஸ்கூல்தெரு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி  ராஜ்குமார்(38) . இவர் தனது வீட்டில் 1 பசுமாடு, 1 ஆடு வளர்த்து வருகிறார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ராஜ்குமார் வளர்த்து வந்த ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்றது. ஆனால், அந்த ஆட்டுக் குட்டிகளை அப்பகுதியில் உள்ள நாய்கள் கடித்து கொன்று விட்டதால், இறந்த ஆட்டுக்குட்டிக்கு பதிலாக வேறு ஆட்டிக்குட்டிகளை விலைக்கு வாங்கி வந்துள்ளார்.

அந்த ஆட்டிக்குட்டிகளுக்கு  ஏற்கெனவே வீட்டில் வளரும் இரண்டு குட்டிகளை ஈன்ற ஆடு பாலூட்ட  சேர்த்துக் கொள்ளவில்லையாம். இதையடுத்து அந்த ஆட்டுக் குட்டிகள் இரண்டுக்கும் அவர் வளர்த்து வரும் பசு மாடு பால் குடிக்க  அனுமதித்தது.

இதன் காரணமாக அந்த 2 ஆட்டுக் குட்டிகளும்   காலை மற்றும் மாலை நேரங்களில் பசுமாடுவிடம் சென்று பால் குடித்து வருகின்றன. ஆட்டுக் குட்டிகள் பசிக்கும் போது தானாகச் சென்று ராஜ்குமார் வளர்த்து வரும், பசுமாட்டிடம் சென்று அதன் மடியில் பாலை குடித்துப் பசியை தீர்த்துக் கொள்கின்றன.

பசு மாடும் ஆட்டுக் குட்டிகளை விரட்டியடிக்காமல் ஆட்டுக் குட்டிகளை தான் ஈன்ற கன்றுக்குட்டிகள் போல அரவணைத்து பால் கொடுத்து வருகிறது. இந்த பசு மாடு தாய் உள்ளத்துடன் ஆட்டுக் குட்டிகளுக்கு பாலைக் கொடுத்து அதன் பசியை போக்குவதை  அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

—வேலூர் – நிருபர்—

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top