Close
நவம்பர் 22, 2024 12:49 காலை

ஜல்லிக்கட்டுப் போட்டி வழிகாட்டு நெறிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், 2023 -ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அரசி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில், 2023 -ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நடத்தக்கூடிய   விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அரசிதழில் பதிவு செய்ய விழா நடைபெறுவதற்கு 20  நாள்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத் துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் என அரசால் ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு முறையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் இணையதளம் வாயிலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதனை காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும்.அதன்பேரில், உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவச் சான்றின் அடிப்ப டையில், பரிசீலனை செய்து தகுதியான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்தவர்களும் அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை (SOP) கடைபிடித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போன்ற நிகழ்ச்சிகளை பாதுகாப்பாகவும் அரசின் வழிகாட்டுதல்களின் படியும் சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top