தேராவூரில் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் , விராலிமலை அருகே உள்ள தேராவூர் கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தேராவூர் ஊராட்சி மன்ற தலைவர் பா. ரூபப்பிரியா பாஸ்கரன் , மற்றும் விராலிமலை ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் செல்வி ப.தமிழ்ச்செல்வி, விராலிமலை ஒன்றிய வேளாண் அலுவலர் செல்வி ப.ஷீலாராணி மற்றும் புஷ்கரம் வேளாண்அறிவியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் கரண் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய வேளாண் உதவி இயக்குனர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் சிறப்பியல்புகளையும் மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தையும் மற்றும் கிராம மக்களுக்கு அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் ஆகியோர் மாணவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கிராம மக்களை கேட்டு கொண்டனர்.