Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

இல்லம் தேடிக் கல்வி… மன மகிழ்ச்சியுடன் வரும் மாணவர்கள்…!

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ வெங்கடேஸ்வரி,  ந.நரசிம்மன் ஆகியோரின் ஆலோசனையின்படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா மெய்குடிப்பட்டி குடியிருப்புகளின் இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிட்டு போது தன்னார்வலர்கள் ரஞ்சனி,தேவி ஆகியோர் மையங்கள் செயல்பாட்டில் இருந்தது.

மையத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கி ஆலோசனை வழங்கியதாவது மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளித்து வரும் தன்னார் வலரை பாராட்டினார். எண்ணும், எழுத்தும் திட்டத்தில் தொடக்க நிலை மாணவர்களுக்கு தேர்வு வைத்து அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும், மாணவர்களின் வருகை பதிவை ITK செயலியில் பதிவேற்றம் வேண்டும் எனவும், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

தங்களுடைய படைப்புகளை இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான வெளிவரும் தொடுவானம் இதழில் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மாணவர்களின் அன்றாட நிகழ்வுகளை இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
மாணவர்கள் வாசித்தல், கதை, விளையாட்டு, பாடல்கள் மற்றும் எளிய அறிவியல் செயல்பாடுகள் மூலம் கற்று வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.. கொரனோ கால கற்றல் இழப்புகளை சரி செய்து தற்போது அடிப்படை திறன்களையும், வாசிப்பு திறன்களையும் மனமகிழ்ச்சியுடன் கற்பதற்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஓராண்டாக மிகுந்த பயனளிப்பதாகவும் , மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top