Close
நவம்பர் 22, 2024 6:57 காலை

கால்பந்து மன்னன்… கால்பந்து பிதாமகன் பிலே மறைந்தார்

கால்பந்து மன்னன் பிலே

கால்பந்து மன்னன் பிலே மறைந்தார்

கால்பந்து மன்னன் பிரேசிலின் பிலே மறைந்தார்…

கண் பார்க்கும் இடத்தில் துல்லியமாக காலால் நொடியில் பந்தை கடத்தும் வித்தைதான் கால்பந்து விளையாட்டு, மனம் முழுக்க பந்தின் மேல் ஒன்றாமல் அந்த ஆட்டம் சாத்தியமில்லை.
வலது கால், இடது கால், தலை இவை அனைத்தையும் பயன்படுத்தி சிறப்பாக விளையாடும் வீரர்கள் என்று வரலாற்றில் சிலர் மட்டுமே உள்ளனர். அதில் குறிப்பிட தகுந்தவர் பிலே.

21ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து முன்னணி வீரர்களின்
திறன்களையும் அவர்கள் செய்யும் வித்தைகளையும், 1950/60 களிலேயே வெளிப்படுத்தியவர் பெலே. 1977 இல் முழுநேரக் கால்பந்திலிருந்து ஓய்வு பெற்ற தன்னிகரற்ற பிலே,பல சூட்சும நகர்வுகளை அறிமுகபடுத்தினார். கால் பந்தாட்ட களங்களில் அவை இன்றுவரை பல வீரர்களால் பின்பற்றப்படுகின்றன.

அன்றைய கட்டுப்பாடுகள் இப்போது போல் ஒழுங்கு படுத்தப்பட்டதாகவும் கண்டிப்பானதாகவும் இல்லை. அப்போது கால்பந்து வீரர்கள் விளையாடும் போது கடுமையாக தாக்கிக் கொள்வார்கள்.காயங்கள் பெரிதாக இருந்தால் மீண்டு வருவது மிகவும் கடினம், காரணம் இப்போது உள்ளதைப் போன்ற மருத்துவ உதவி அப்போது கிடையாது.
அப்படி தடைகள் நிறைந்த, அனுகூலமற்ற ஒரு காலகட்டத்தில் மூன்று முறை உலக கோப்பையை வென்றும், 1200க்கும் மேல் கோல்களை அடித்தும் சாதனை செய்தவர் பிலே.
அவரது ஆகக்கூடிய சிறந்த ஆட்டம் என்றால் ஸ்டாக்ஹொம்மில் உள்ள ராசுன்டா அரங்கத்தில் ஆடிய ஆட்டம் தான்.

1958 உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், அப்போதைய ஜாம்பவான் என்று கருதப்பட்ட சுவீடன் நாட்டுக்கு எதிராக அற்புதமாக விளையாடி இரண்டு கோல்களை அடித்து பிரேசிலுக்குமுதல் உலகக் கோப்பையை வென்று தந்தார் பெலே. அப்போது அவருக்கு வயது வெறும் 17 தான்!

கால்பந்து ரசிகர்களுக்கு அவர் என்றும் அபிமானத்திற்குரி யவர். இனியும் உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் நினைவில் எப்போதும் கொண்டாடப்படுவார்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top