Close
நவம்பர் 24, 2024 10:07 மணி

பெண்ணுரிமை போராளி சாவித்ரிபாய் பூலே பிறந்த நாளில்…

இந்தியா

பெண் உரிமை போராளி,வாழ்வில் போராடிய அம்மையார் சாவித்ரிபாய் பூலே

ஒரு மகத்தான பெண் உரிமை போராளி, பெண்கள் தன் வாழ்வில் கல்வி பெறுவதற்காக போராடிய அம்மையார் சாவித்ரிபாய் பூலே பிறந்த நாளில்…

படித்தால் பெண் இனத்திற்கும் சமுதாயத்திற்கும் கேடு என்ற நிலை இருந்த இந்தியாவில், படித்த முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே அம்மையார்.இவர் விதைத்த கல்வி விதை இன்று இந்தியாவில் விருட்சமாக பல துறைகளில் வளர்ந்து உயர்வு பெற்று இருக்கிறது.

பெண்களுக்கு படிப்பறிவு கூடாது என்று மூடநம்பிக்கை நிறைந்த சமூகத்தில் முதலில் படிப்பறிவை கற்றவர். விதவைகளுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு, கல்வி போதித்ததால், கோபம் அடைந்த கும்பல் சாவித்திரி பூலே பள்ளி செல்லும் போது, அவர் மேல் கற்கள், சாணம், மனித மலம் எல்லாவற்றையும் வீசி எறிந்து கொடுமை செய்தனர்.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு காலம் தள்ள வேண்டியிருந்த அவரது ஆசிரியப்பணி அத்தனை இலகு வானதாக இல்லை. பாடசாலையை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் ஒரு நாள் விடாது அவர் மோசமான சங்கடங்களை எதிர்கொண்டார். அவை ஒவ்வொன்றையும் அமைதியாகவும் துணிச்சலாகவும் சந்தித்தார் இந்த வரலாற்று நாயகி.

சாவித்திரி பாய் புலே, ஜோதிராவ் புலே இருவரும் மகாராஷ் டிரத்தில் 9 இடங்களில் அனைத்து சாதியினருக்கும், விதவைகளுக்கும், தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் என எல்லோருக்கும் கல்வி கொடுக்க பள்ளிக்கூடங்களை துவங்கினர்.

இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்த பள்ளிகள் அரசு பள்ளியை விட சிறப்பாக இருந்தன. இதனால் 1852, நவம்பர் 14  -ல்,பிரிட்டிஷ் அரசால் சிறந்த ஆசிரியர் என்ற பாராட்டும் பரிசு பெற்றார். இந்திய வரலாற்றில் மறைக்கப் பட்ட பெண் போராளியான, சமூக சீர்திருத்தவாதியான சாவித்திரி பூலே பற்றி எந்த பாட புத்தகத்திலும் இல்லை என்பது சோகம்.

இது ஒரு வரலாற்றுப் பிழை. சிறந்த ஆசிரியராக, சீர்திருத்த வாதியாக, மருத்துவராக, கவிஞராக செயல்பட்ட அம்மை யாரை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி யிருக்க வேண்டும்.

இருண்ட காலத்தில் ஆசிரியப் பணியைத் துணிச்சலோடு மேற்கொண்ட சாவித்ரிபாய் பூலே அவர்களின் சிறப்பினை இந்தியப் பெண் சமூகம் அறிந்திருக்க வேண்டும்.

அவர் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல சிறந்த கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப் போக்கு இவரில் இருந்தே தொடங்கியது எனலாம்.இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தது..

All gets lost
without knowledge
We become animal
without wisdom,
Sit idle no more,
Go, Get Education

அறிவிழந்து போனால்நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம். சும்மா இராதீர்கள்,போய் இனியேனும்கல்வியைப் பெறுங்கள்..என்கிற அவரது வரிகள் கல்வியின் அவசியத்தை குறிப்பாக பெண் உரிமையை, பெண் கல்வியை பேசியது..,இந்த நாளில் அவர் தியாகத்தை போற்றுவோம்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top