புதுக்கோட்டையில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தல் புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொதுச் செயலாளர் கம்பம் ராஜன் மாநில தலைவர் நடேசன் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தத் தேர்தல் முடிவில் மாவட்ட தலைவராக கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பொறுப்பாளராக கார்த்திகேயன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வெற்றி பெற்றவர்களை பாராட்டி சால்வை அணியப்பட்டது
இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டன
அதில்,தமிழகத்தில் மருத்துவ சமுதாய மக்கள் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் ஆகியவற்றைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து கொண்டு உள்ளனர் எங்களுடைய சமுதாயத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வேண்டும்.அல்லது 50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் குக்கிராமங்களில் எங்களுடைய சமுதாய மக்கள் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மற்ற மாநிலத்தில் இந்த சமுதாயத்திற்கு சட்டப் பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
அதேபோன்று அந்தப் பாதுகாப்பினை தமிழக அரசும் வழங்கி சுயமரியாதையோடு வாழ்வதற்கு வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அறநிலைத்துறை கட்டுப்பட்டுள்ள கோவில்களில் எங்களுடைய சமுதாய மக்கள் இசை வாசிக்கின்றார்கள். முடி திருத்தம் செய்கின்றார்கள். அவர்களுக்கு தமிழக அரசு தொகுப்பூதிய மாதம் ரூபாய் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இந்தத் தொகுப்பூதியம் ஒரு சிலருக்கு மட்டும் வருவதாகவும் மற்றவர்கள் எவருக்கும் வருவதில்லை ஆகவே அறநிலையத் துறையில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும்.
முடி திருத்தும் தொழிலாளர் வாரியத்திற்கு வாரிய தலைவராக எங்களது முடி திருத்தும் தொழிலாளர்கள் ஒருவரை வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.