Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்பு

சென்னை

சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்றார்.

சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையராக மண்டலிகா ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்றார்.
சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களும், சென்னை பயணிகள் விமான நிலையம், மீனம்பாக்கம் சரக்குகள் கையாளும் முனையம், உள்நாட்டு முனையங்களான கான்கார், இருங்காட்டுக் கோட்டை உள்ளிட்டவை  சென்னை மண்டல முதன்மை தலைமை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
இங்கு முதன்மை தலைமை ஆணையராக பணியாற்றி வந்த எம். வி .எஸ் .சவுத்ரி கடந்த சனிக்கிழமை பணியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு புதிதாக நியமிக்கப் பட்ட மண்டலிகா ஸ்ரீனிவாஸ்  பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பு புது தில்லியில் உள்ள  நேரடி வரிகள் வாரியத்தில் இயக்குனர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். 1988 -ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அதிகாரியாக பொறுப்பேற்ற ஸ்ரீனிவாஸ்  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னத்தை சேர்ந்தவர்.
பொறுப்பேற்றுக்கொண்ட மண்டலிகா ஸ்ரீனிவாசுக்கு சுங்கத்துறை ஆணையர்கள், இணை, துணை ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சுங்க இல்ல தரகர் சங்க நிர்வாகிகள் ஆர். என்.சேகர், எஸ் நடராஜா உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top