Close
நவம்பர் 22, 2024 6:26 மணி

மக்காசோளம் படைப்பழு தடுப்பு: வேளாண் பல்கலை. மாணவர்கள் செய்முறை விளக்கம்

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ள கூகலூர் கிராமத்தில் களப்பயிற்சியளித்த வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள்

மக்காசோளத்தை தாக்கும் படைப்பழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவாக்கம் மற்றும் செய்முறை விளக்கமளித்தனர்.

கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ள கூகலூர் கிராமத்தில் வேளாண்துறை சார்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்  நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு பற்றியும் அதைக் கட்டுப்படுத்தும் முறையைப் பற்றியும் செய்முறையாக விவசாயிகளுக்கு விளக்கினர்.

கூகலூர் கிராமத்தில் உள்ள விவசாயி சௌந்தரநாயகி என்பவரது விவசாய தோட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் மற்றும் கோபி வட்டார வேளாண் அலுவலர் முன்னிலையில் படைப்புழு கட்டுப்படுத்தும் வழிமுறையை செய்முறையாக விவரித்தும்  காண்பித்தனர்.

மேலும் மக்காச்சோளத்தில் நோய் கட்டுப்படுத்தும் முறைகளை எளிய முறையில்  எடுத்துரைத்தனர். மேம்படுத்துவது பற்றியும் விளக்கினர். ஆண்டுதோறும் கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண் துறையும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து இதுபோன்ற  நிகழ்வுகளை வழி நடத்துவதால் விவசாயிகள் பயனடைகிறார்கள்.

இதில், மாணவர்கள் ஜி அரவிந்த், டி அரவிந்தன்,பி பாலச் சந்துரு, ஆர். தயானந்த், கே.தினேஷ்,சிவகிருஷ்ண சைதன்யா ரெட்டி,எம். ராஜேஷ்,சாய் பிரவீன்,பி சுகவரன்,எம் தமிழ் செல்வன்,எஸ் எல் யுகேஷ்வர்,சாய் பிரசன குமார் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top